கம்பராமாயணம் 3752 · ஆரணிய 10.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இளவலே - என் தம்பியே; தோகையும் பிரிந்தனள் - (கானகம் வந்தபின்) மயில் போன்ற சாயல் கொண்ட சீதையும் பிரிந்தாள்; எந்தை துஞ்சினன் - தந்தை முறையினனாகிய சடாயுவும் இறந்தான்; வேக வெம் பழி சுமந்து - (இவ்வாறு எனக்கு அரியராகிய இருவரையும் பேண முடியாமையால்) விரைந்து பரவக்கூடிய கொடிய பழியைச் சுமந்து கொண்டு; உழல வேண்டலேன் - உயிர் கொண்டு அலைய நான் விரும்பவில்லை; ஆதலின் - ஆகையால்; யான் இனி இதனுக்கு ஆமிடம் - நான் இனிமேல் இப்பூதத்துக்கு உணவு ஆவேன்; ஈண்டு நின்று ஏகுதி என்றான் - இங்கிருந்து நீ தப்பிப் போவாயாக என்றான்.
தோகை - முதலில் மயிலுக்கு ஆகி, அடுத்து மயிலனைய சாயல் கொண்ட சீதைக்கு ஆகி வந்த இருமடி ஆகுபெயர். தோகையும் என்பதில் உம்மை எதிரது தழீஇய எச்சவும்மை. ஆமிடம் - ஆமிஷம் என்ற வட சொல்லின் தமிழ் வடிவம்; உணவு என்னும் பொருள் உடையது; பின்னரும் இச்சொல் ஆளப்பட்டுள்ளது (4806)
ஆங்கிலம் · English translationAI
Translation
- "My peahen is parted from me, and my father has died;
- I do not wish to wander bearing a cruel shame that spreads swiftly;
- therefore I will now become food for this thing;
- go away from here, my younger brother!" he said.
What the poem says
Faced with Kavantaṉ, Irāmaṉ despairs. He has lost Cītai, his "peahen", and Caṭāyu, the vulture king who was like a father to him, has died trying to save her. Unable to protect either of them, he feels disgraced and would rather let the monster eat him. He tells Ilakkuvaṉ to escape alone. The word he uses for "food" comes from the Sanskrit for meat or prey.