கம்பராமாயணம் 3753 · ஆரணிய 10.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஈன்றவர் இடர்ப்பட - பெற்றோர் துன்பம் அடையவும், எம்பி துன்புற - என் தம்பியாகிய பரதன் துன்பப்படவும்; சான்றவர் துயர் உற - பெரியவர்கள் வருத்தமுறவும்; பழிக்குச் சார்வுமாய் - (உற்றாரும் பெரியோரும் துன்பமடையக் காரணன் ஆனதோடு, மனையாளையும் சடாயுவையும் காப்பாற்ற முடியாத) பழிக்கு இடமாகி; தோன்றலின் - யான் தோன்றியுள்ளமையால்; என் உயிர் துறந்த போது அலால் - என் உயிரை விட்ட போதன்றி; ஊன்றிய பெரும் படர் - நிலைத்துவிட்ட இப் பெரும்பழியை; துடைக்க ஒண்ணுமோ - அழிக்க முடியுமா?
'தோன்றிற் புகழோடு தோன்றுக' என்ற குறள் நெறிக்கு எதிர் மறையாகப் பழியோடு தோன்றியதாகக் குறித்தார் கவிச்சக்கரவர்த்தி; இங்கே எதிர்மறுத்து எதிரொலிப்பதை உணர்க. ஓகாரம் எதிர்மறை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Since I was born only to bring suffering on those who bore me, grief on my brother,
- sorrow on the worthy, and to become a cause of shame,
- unless I give up my life,
- can this deep-rooted great sorrow ever be wiped away?"
What the poem says
Irāmaṉ continues his lament. His exile has grieved his parents and his brother Paratan and distressed the elders, and now he has failed to protect his wife and Caṭāyu. He feels that his life has brought only blame, and that only death can wipe it away.
The commentary contrasts this with a famous couplet of the Tirukkuṟaḷ, which says that if one must be born, one should be born to win fame.