கம்பராமாயணம் 3763 · ஆரணிய 10.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விடத்தின் கனல் பூதம் - நஞ்சுபோல் எரிக்கும் இந்தப் பூதம்; இன்று இத் தகை வாளால் - இன்றைக்கு இந்தத் தகுதிமிக்க வாளால்; தணிக்கும் தன்மைத்து அன்று எனின் - வெட்டித் துணிக்கத்தக்கது அன்று என்றால்; கணிக்கும் தன்மைத்து அன்று - நம்மால் வேறு வகையில் மதிப்பிடத் தக்கதன்று; பிணிக்கும் கையும் பெய் பில வாயும் - தன் எல்லைக்குள் உள்ளவற்றையெல்லாம் கட்டிப்பிடிக்கின்ற கையையும் சிக்கியவற்றையெல்லாம் பெய்கின்ற குகை போன்ற வாயையும்; பிழையாமல் - குறி தப்பாமல், துணிக்கும் வண்ணம் காணுதி - துண்டாக்கிப் பிளக்கும் தன்மையைக் காண்பாயாக; துன்பம் துற - துயரத்தை விடுவாயாக; என்றான் - என்று இலக்குவன் கூறினான்.
இப் பூதம் நம் வாளால் துணிக்கத்தக்கதே அன்றி வேறுவகையால் மதிக்கத் தக்கதன்று என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "If this is not a thing to be brought down today by this worthy sword,
- it is beyond reckoning; this monster that burns like poison:
- its binding arms and the cave-like mouth it stuffs, unerringly,
- see how I cut them through. Cast off your sorrow!" he said.
What the poem says
Ilakkuvaṉ ends his speech with confident action. The poisonous monster can be dealt with only by the sword, and he will cut off its grasping arms and split its cavernous mouth without missing. He urges his brother to give up his despair and watch.