கம்பராமாயணம் 3762 · ஆரணிய 10.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கேட்டார் - (தளர்ந்து உயிர்விடத் துணிந்த உன் நிலை பற்றிக்) கேள்விப் பட்டவர்கள்; கொள்ளார் - உன் முடிவை ஏற்கமாட்டார்கள்; கண்டவர் பேணார் - நேரிலேயே காண நேரிட்டவர்கள் உன் செயலை விரும்பமாட்டார்கள்; 'கிளர் போரில் - (சீதையை மீட்கும் பொருட்டுக்) கிளர்ந்தெழுகின்ற போரிலே; தோடு ஆர் கோதைச் சோர் குழல் தன்னை - தொகுதியான மாலையணிந்து வாழும் கூந்தலாளான சீதையை; துவளாமல் மீட்டான் என்னும் பேர் இசை கொள்ளான் - தளராமல் மீட்டுவிட்டான் என்று உலகவர் சொல்லும் பெரிய புகழைக் கொள்ளாதவனாய்; செரு வெல்ல மாட்டான் - போரிலே வெற்றி கொள்ள முடியாதவனாய்; மாண்டான் - இராமன் இறந்தான்; என்றலின் மேலும் - என்று சொல்லப்படுவதைவிட; வசை உண்டோ - பழி உண்டோ?'
பேணுதல் - விரும்புதல், தோடு + ஆர் = தோட்டார்; தோடு - தொகுதி; இங்கே மலர்களின் தொகுதி. கிளர் போர், சோர் குழல்; வினைத் தொகைகள் - சோர்குழல் வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை; இங்கே சீதை. கொள்ளான், மாட்டான் - முற்றெச்சங்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Those who hear will not accept it, and those who see will not approve: 'In the surging battle
- her of the loosened tresses, wreathed in clustered flowers, without faltering
- he did not win the great fame of having rescued; he could not win the fight;
- he died': is there any disgrace greater than to have that said?"
What the poem says
Ilakkuvaṉ turns Irāmaṉ's own argument back on him. Irāmaṉ wanted to die to escape blame. But if he dies now, everyone who hears of it or sees it will condemn it: they will say he died without winning the battle and without rescuing Cītai. That would be the greatest disgrace of all.