கம்பராமாயணம் 3761 · ஆரணிய 10.33

Section ஆரணிய காண்டம் / 10. கவந்தன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' ஓதும் கால் , அப்பல் பொருள் முற்று உற்று , ஒருவாத
வேதம் சொல்லும் தேவரும் வீயும் கடை வீயாய் ;
மாதங்கம் தின்று உய்ந்து இவ் வனத்தின் தலை வாழும்
பூதம் கொல்லப் பொன்றுதி போலும் ? பொருள் உண்டோ ? ''

பொருள் · Meaning in Tamil

ஓதுங்கால் - உண்மை நிலையினை எடுத்துச் சொல்வதானால்; அப் பல்பொருள் முற்றுற்று - எங்கெங்கும் உள்ள அந்த எல்லாப் பொருள்களும் அழிந்து; ஒருவாத வேதம் சொல்லும் தேவரும் வீயும் கடை - எக்காலும் அழியாத வேதம் ஓதும் தேவர்கள் அழியும் காலத்திலும்; வீயாய் - நீ அழியமாட்டாய் - (உண்மை இதுவாயிருக்க); மாதங்கம் தின்று உய்ந்து - யானை (முதலியவற்றைத்) தின்று உயிர்பெற்று; இவ் வனத்தின் தலை வாழும் - இந்தக் காட்டிலே வாழ்கின்ற, பூதம் கொல்லப் பொன்றுதி - பூதம் கொல்வதால் நீ இறந்துவிடுவாய்; என்னின் - என்று சொன்னால்; பொருள் உண்டோ - அவ்வாறு சொல்வதில் பொருள் உண்டா (அவ்வாறு சொல்வது பொருந்தாது என்பது கருத்து).

அகரச் சுட்டு உலகறி சுட்டு நெஞ்சறி சுட்டு. எல்லார்க்கும் தெரிந்ததே என்ற கருத்துடையது. 'விண்ணோர் அமுது உண்டும் சாவ' என்பதால் சாவாமை தரவல்ல அமுதம் உண்ட தேவர்களும் சாவர் என்று கொள்வது நூல் வழக்கு. அண்ட சராசரங்களும் தேவர்களும் அழிந்தாலும் இராமனுக்கு அழிவு இல்லை என்பது குறிப்பு. அவ்வாறு ஆவது அவன் பரம்பொருள் என்பதால். 'காற்றை முன்னுடைப் பூதங்கள்; அவை சென்று கடைக்கால் வீற்று வீற்று உற்று வீவுறும்; நீ என்றும் விளியாய்' (10058) என்று பிரமன் இராமனைக் குறித்தல் இங்கு நினையத்தக்கது.

மாதங்கம் : யானை, மதங்கர் என்ற முனிவரால் பேணப்பட்டமையின் யானைக்கு மாதங்கம் எனப் பெயர்; தத்திதாந்தப் பெயர் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "If one speaks the truth, when all those many things have come to their end
  2. and even the gods who chant the unfailing Veda perish, you will not perish;
  3. so if you were to die because a monster that lives in this forest,
  4. surviving by eating elephants, kills you, would that make any sense?"

What the poem says

Ilakkuvaṉ now reminds Irāmaṉ of who he really is. When the whole universe is dissolved at the end of an age, and even the gods who drank the nectar of immortality die, Irāmaṉ will remain, because he is the Supreme Being. It is absurd that such a one should be killed by a forest monster that lives on elephants. Later in the epic the god Brahmā will say the same thing to Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' ōtuṅkāl, ap pal poruḷ muṟṟuṟṟu, oruvāta
vētam collum tēvarum vīyum kaṭai vīyāy;
mātaṅkam tiṉṟu uyntu iv vaṉattiṉtalai vāḻum
pūtam kollap poṉṟuti eṉṉiṉ, poruḷ uṇṭō? ''