கம்பராமாயணம் 3760 · ஆரணிய 10.32

Section ஆரணிய காண்டம் / 10. கவந்தன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

நல் பொன் தோளாய் - அழகியதும் பொன் அணி பூண்டதுமாகிய தோளினை உடையவனே; என் பெற்றாளும் யானும் - என் தாயும் யானும்; எனைத்து ஓர் வகையாலும் - எவ்விதத்தாலும்; நின் பெற்றாட்கும் நிற்கும் - உன்னைப் பெற்ற கோசலைக்கும் உனக்கும்; நினைப்புப் பிழையாமல் - கருத்து மாறுபடாத வண்ணம்; நல்லவர் பேண - நல்லவர்கள் போற்றும்படியாக; நனி நிற்கும் சொல் பெற்றால் - நன்றாக உங்கள் சார்பில் நிற்கிறோம் என்னும் புகழுரை பெறுவதாயிருந்தால்; மற்று ஆர் உயிர் பேணி - (அந்தப் புகழுரையே பெரிது எனக் கருதுவோமேயல்லாமல்) அதற்கு மாறாக அரிய உயிரே பெரிது எனப் பேணி; துறவேம் - (உங்கள் இருவரையும்) விட்டு விலகிவிடமாட்டோம்.

சுமித்திரைக்கும் தனக்கும் கோசலை சார்பிலும் இராமன் சார்பிலும் உறுதியாக நின்று பேணுதலே உரிய நெறி என்கிறான் இலக்குவன். என் தாய்க்கும் எனக்கும் உன் தாய்க்கும் உனக்கும் என்ற சொற் கிடக்கை முறை நிரல் நிரையாகும். சுமித்திரை கோசலை சார்பிலும் இலக்குவன் இராமன் சார்பிலும் நிற்றலே பெரிதெனப் பேணுவள் என்பது கருத்து. இந்நெறியைப் பேணுவோர் இவர் எனல் சான்றோரிடம் நற்பெயர் பெறுவதைவிட தங்கள் உயிரைப் பெரிதென இவர்கள் கருதார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "My mother and I, in every possible way,
  2. never straying from the wishes of the one who bore you and of you,
  3. O you of fine, gold-adorned shoulders, so that the good may cherish us,
  4. have won the name of standing firm; we will not give it up to save our precious lives."

What the poem says

Ilakkuvaṉ explains that he and his mother Cumittirai have always stood firmly on the side of Kōcalai and Irāmaṉ. This loyalty has won them the praise of good people, and they value that good name above their own lives. He will not now abandon his brother to save himself. The verse pairs the two mothers and the two sons in a balanced order.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' eṉ peṟṟāḷum yāṉum eṉaittu ōr vakaiyālum
niṉ peṟṟāṭkum niṟkum niṉaippup piḻaiyāmal,
nal poṉ tōḷāy! nallavar pēṇa naṉi niṟkum
col peṟṟōm; maṟṟu ār uyir pēṇit tuṟavēmāl. ''