கம்பராமாயணம் 3765 · ஆரணிய 10.37

Section ஆரணிய காண்டம் / 10. கவந்தன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'' ''
பாட வேறுபாடு · Project Madurai reads
1இனையர் ஆகிய இருவரும் , முகத்து இரு கண் போல் ,
கனையும் வார்கழல் வீரர் சென்று அணுகலும் , கவந்தன் ,
'' வினையின் எய்தினிர் யாவர் கொலாம் ? '' என்று வினவ ,
நினையும் நெஞ்சினர் , இமைத்திலர் , உருத்தனர் , நின்றார் .

பொருள் · Meaning in Tamil

இனையர் ஆகிய - மேற்குறித்தது போல ஒருவருக்கொருவர் முந்தியவராகிய; கனையும் வார்கழல் வீரர் இருவரும் - ஒலிக்கும் பெரிய வீரக்கழல் அணிந்த வீரராகிய இராமலக்குவர் இருவரும்; முகத்து இரு கண்போல் - முகத்தில் உள்ள இரண்டு கண்களும் ஒன்றையே பார்ப்பது போல; சென்று அணுகலும் - சென்று கவந்தனை நெருங்கவும்; கவந்தன் வினையின் எய்திய வீரர் நீர் யாவர்' கொல் என்ன - உங்கள் வினைப் பயனால் (அழியும் பொருட்டு) இங்கு வந்த வீரர்களாகிய நீங்கள் யார் என்று கேட்க; நினையும் நெஞ்சினர் - நிகழப்போவதை ஒன்று போலக் கருதிய மனம் உடையவராய்; இமைத்திலர் உருத்தனர் நின்றார் - கண் இமைக்காமல் சினம் கொண்டு உறுதிப்பட நின்றனர்.

கண் இரண்டு, ஆனாலும், பார்ப்பது ஒன்றையே. இக்கருத்தே முகத்து இரு கண் போல்' என்ற உவமையின் பொதுத் தன்மை. கனையும் கழல், வார்கழல் எனக் கூட்டிப் பொருள் கொள்க. கனைதல் ஒலித்தல்; வார்; பெரிய. 'உரு உட்கு ஆகும்' என்பது தொல்காப்பியம். உட்கு : அச்சம். உருத்தனர் : கோபித்தவராய்; முற்றெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Such were the two; like the two eyes in a single face
  2. the heroes with long, ringing anklets went up close; and Kavantaṉ
  3. said, "Heroes brought here by your own fate, who are you?"
  4. With minds intent on one purpose, unblinking, fierce, they stood.

What the poem says

The brothers, who were just competing to go first, now reach Kavantaṉ side by side. The poet compares them to the two eyes of one face, two in number but looking at the same thing. Kavantaṉ asks scornfully who they are, implying that fate has brought them to their death. They do not answer: they stand their ground, staring at him without blinking, angry and resolved.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉaiyar ākiya iruvarum, mukattu iru kaṇpōl,
kaṉaiyum vār kaḻal vīrar ceṉṟu aṇukalum, kavantaṉ,
'' viṉaiyiṉ eytiya vīrar nīr yāvarkol? '' eṉṉa,
niṉaiyum neñciṉar, imaittilar, uruttaṉar, niṉṟār.