கம்பராமாயணம் 3768 · ஆரணிய 10.40

Section ஆரணிய காண்டம் / 10. கவந்தன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆளும் நாயகன் - உயிர்க் கூட்டத்தை ஆண்டருளும் பரமனாகிய இராமன்; அம் கையின் - தன் அழகிய கையினால், தீண்டிய அதனால் - தொட்டதினால்; மூளும் சாபத்தின் - மிகுந்த சாபத்தினால்; முந்திய தீவினை முடித்தான் - எம் முயற்சிக்கும் முந்துவதாகிய தீவினைப் பயனை ஒழித்தான்; தோளும் வாங்கிய - தோளும் அறுபட்ட; தோம் உடை யாக்கையைத் துறவா - குற்றம் உடைய உடம்பினைத் துறந்து; நீளம் நீங்கிய பறவையின் - கூட்டை விட்டு வெளியேறிய பறவையைப் போல; விண் உற நிமிர்ந்தான் - வானத்தின் உயரிடத்திலே தோன்றினான்.

இராமபிரானின் படைக்கலத்தான் தீண்டப் பெற்றவர்கள் வினைப்பயன் நீங்கியவராய்ப் பெரும்பேறு பெறுவதாகக் கூறுவது கம்பராமாயணத்தின் சிறப்புப் போக்கு. அவ்வாறு தீண்டுவது பரமன் அருள்கின்ற தீட்சை ஆகிறது. கைக்கு அழகாவது நற்பயன் அருளும் திறம். 'மற்றொன்று சூழினும் தான் முந்துறும்' (குறள். 380) என்ற வள்ளுவர் வாக்கினை நினைந்து 'முந்திய தீவினை என்றார். தோளும் என்பதிலுள்ள உம்மை இசை நிறை (ஓசை நிரப்புவதற்காக வரும் அசை). நீளம் கூடு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because the ruling lord had touched him with his lovely hand,
  2. he brought to an end the evil deed that came before, through the burning curse;
  3. leaving behind the flawed body whose arms had been cut away,
  4. like a bird that leaves its nest he rose up to the sky.

What the poem says

Touched by Irāmaṉ's hand, Kavantaṉ is freed from the curse and from the past evil that caused it. He leaves his ugly, maimed body as a bird leaves its nest and rises into the sky in his true form. The commentary says it is typical of the poem that those touched by Irāmaṉ, even by his weapons, are released from their karma: the touch works like a blessing given by God.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āḷum nāyakaṉ am kaiyiṉ tīṇṭiya ataṉāl,
mūḷum cāpattiṉ muntiya tīviṉai muṭittāṉ;
tōḷum vāṅkiya tōmuṭai yākkaiyait tuṟavā,
nīḷam nīṅkiya paṟavaiyiṉ viṇ uṟa nimirntāṉ.