கம்பராமாயணம் 3767 · ஆரணிய 10.39

Section ஆரணிய காண்டம் / 10. கவந்தன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கைகள் அற்று - கைகள் அறுக்கப் பெற்றதால்; வெங்குருதி ஆறு ஒழுகிய கவந்தன் - வெப்பமான இரத்த ஆறு பெருகிய கவந்தன்; மெய்யின் - உடலின் தோற்றத்தால்; மேற்கொடு கிழக்கு உற - மேற்கிலிருந்து கிழக்கு நோக்கப் பெருகிவரும்; பெரு நதி விரவும் - பெருமைக்குரிய காவிரியாறு பொருந்திய; சைய மா நெடுந் தாழ்வரைத் தனிவரை தன்னோடு - சைய மலை என்னும் பெயருடைய பெரியதும் தாழ்ந்து விரிந்த அடி வாரம் கொண்டதுமாகிய ஒப்பற்ற மலையோடு; ஐயம் நீங்கிய பேர் எழில் உவமையன் ஆனான் - ஐயத்துக்கு இடம் இல்லாத பேரழகு உடைய உவமையனாகக் காணப்பட்டான்.

காவிரி பெருகி வரும் சையமால் வரைபோல் இருபாலும் குருதிபாயும் கவந்தனின் உடம்பு தோற்றமளித்தது என்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி சைய மலை; காவிரி அங்கே பெருகுகிறது. மலையின் இருபாலும் காவிரி நீர் பாயும் தோற்றம் பேரழகாகவே இருக்கும். அந்த இயற்கையழகில் ஈடுபட்ட கம்பருக்குக் கவந்தனின் குருதிப் பெருக்கத்தில் உள்ள கொடுமை உறைக்கவில்லை. அந்த அழகு நாட்டம் இந்தக் கொடுமையை விழுங்கிவிட்டது. சையமலையைக் குறித்ததால் செய்யுளில் வந்த பெருநதி என்றது காவிரியாயிற்று. அந்த நதி அங்கே பெருகுதலால்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His arms cut off, rivers of hot blood streaming, Kavantaṉ
  2. in his body, where from west to east the great river spreads,
  3. with the matchless mountain Caiyam, of great and long low-lying slopes,
  4. became, beyond doubt, a comparison of great beauty.

What the poem says

With his arms severed and blood pouring down both sides, Kavantaṉ's huge body resembles the Caiyam mountain, part of the Western Ghats, where the Kāviri river rises and flows east. The commentary remarks that the poet, caught up in the beauty of that familiar landscape, seems to forget the horror of the blood. It also notes that naming Caiyam shows the "great river" to be the Kāviri.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaikaḷ aṟṟu, veṅ kuruti āṟu oḻukkiya kavantaṉ,
meyyiṉ, mēṟkoṭu kiḻakku uṟap peru nati viravum,
caiya mā neṭun tāḻ varait taṉi varaitaṉṉōṭu
aiyam nīṅkiya pēr eḻil uvamaiyaṉ āṉāṉ.