கம்பராமாயணம் 3774 · ஆரணிய 10.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எண் திசையும் திண் சுவரா(க) - எட்டுத் திசைகளே வலிமையான சுவர்களாக அமைய; ஏழ் ஏழ் நிலை வகுத்த - பதினான்கு நிலைகள் உடையதாக வகுக்கப்பட்ட; அண்டம் பெருங்கோயிற்கு எல்லாம் - அண்டமாகிய பெரிய கோயில் முழுவதற்கும், 'அழகுடைய மண்டலங்கள் மூன்றின் மேல் - சூரிய, சந்திர நட்சத்திரம் என்னும் அழகிய மூன்று மண்டலங்களுக்கு மேலாக, என்றும் மலராத புண்டரிக மொட்டின் பொகுட்டு - எப்பொழுதும் மலராத தாமரை அரும்பின் கொட்டையே; புரை - உனது இருப்பிடமாகும்.
திருமாலின் இருப்பிடத்தைக் கூறுவது இச் செய்யுள். அண்டமே கோயில்; திசைகளே சுவர்; மேல் ஏழும் கீழ் ஏழுமாக அமைந்துள்ள உலகங்களே கோயிலின் அடுக்கு நிலைகள்; அக்கோயிலுக்கு ஒளி ஊட்டுவன சூரிய, சந்திர, நட்சத்திர மண்டலங்கள்; அந்த ஒளி மண்டலங்களின் ஒளி பெற்றுத் தான் மலர வேண்டுமென்றில்லாததொரு தாமரை அரும்பு; அந்த அரும்பினுள் உள்ள காணிகை என்னும் (தாமரைக்) காயே பரமபதமாகிய இருப்பிடம். பூவுலகத்துத் தாமரை மலர்வதற்குக் கதிரவன் ஒளி தேவை; ஆயின், பரமபதத் தாமரைக்குக் கதிரவன் முதலாய ஒளி மண்டலங்களின் உதவி தேவைப்படாது. ஏழ் ஏழ் (ஏழேழ்) உம்மைத் தொகை (ஏழும் ஏழும்).
ஆங்கிலம் · English translationAI
Translation
- "With the eight directions for its strong walls, laid out in seven and seven storeys,
- for the whole great temple of the cosmos, above
- the three beautiful spheres, the seed-pod of a lotus bud
- that never opens: that is your abode, O lord!"
What the poem says
Kavantaṉ describes where the Lord dwells. The universe is pictured as a vast temple with the eight directions for walls and fourteen storeys, the seven upper and seven lower worlds. It is lit by the spheres of sun, moon and stars. Above them all is a lotus bud that never opens, because it needs no sunlight to bloom, and the seat inside that bud is the Lord's supreme abode.