கம்பராமாயணம் 3781 · ஆரணிய 10.53

Section ஆரணிய காண்டம் / 10. கவந்தன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' சந்தம் பூண் அலங்கல் வீர ! தனு எனும் நாமத்தேன் ஓர்
கந்தர்ப்பன் ; சாபத்தால் , இக் கடை படு பிறவி கண்டேன் ;
வந்து உற்றீர் மலர் கை தீண்ட , முன் உடை வடிவம் பெற்றேன் ;
எந்தைக்கும் எந்தை நீரே ! இசைப்பது கேண்மின் ! '' என்றான் .

பொருள் · Meaning in Tamil

சந்தப் பூண் அலங்கல் வீர! - அழகிய அணிகளும் மாலையும் அணிந்துள்ள வீரனே; தனு எனும் நாமத்தேன் - நான் தனு என்ற பெயருடையவன்; ஓர் கந்தர்ப்பன் - நான் ஒரு கந்தருவன்; சாபத்தால் - ஒரு முனிவர் இட்ட சாபத்தால், கடைப்படு இப் பிறவி கண்டேன் - கீழானதாகிய இந்தக் கவந்தப் பிறப்பை அடைந்தேன்; வந்துற்றீர் மலர்க்கை தீண்ட - இங்கு வந்து சேர்ந்தவர்களாகிய உங்கள் மலர் போன்ற கைகள் தீண்டியமையால்; முன்னுடை வடிவம் பெற்றேன் - எனக்கு உரியதாகிய பழைய வடிவத்தைப் பெற்றேன்; எந்தைக்கும் எந்தை நீர் - என் தந்தைக்கும் தந்தையர் போன்றவர்கள் நீங்கள்; யான் இசைப்பது கேண்மின்' - நான் சொல்லுவதைக் கேளுங்கள்; என்றான் - என்று மறு வடிவம் கொண்ட கவந்தன் கூறினான்.

தனு என்பது கவந்தனின் முற்பெயர். விசுவாவசு என்று கூறுவதும் உண்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Hero adorned with lovely jewels and garland! I am named Taṉu, a
  2. gandharva; through a curse I came to this lowly birth;
  3. you came, and at the touch of your flower-like hands I regained my former shape;
  4. you are father to my father; listen to what I will tell you!" he said.

What the poem says

Kavantaṉ explains who he is: a gandharva, a heavenly musician, named Taṉu, cursed by a sage to live in the monstrous form the brothers have just destroyed. Their touch has given him back his original body. Out of gratitude and reverence he calls them fathers of his father and asks them to listen to his advice. The commentary adds that some sources name him Viśvāvasu.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' cantap pūṇ alaṅkal vīra! taṉu eṉum nāmattēṉ ōr
kantarppaṉ; cāpattāl, ik kaṭaipaṭu piṟavi kaṇṭēṉ;
vantuṟṟīr malarkkai tīṇṭa, muṉṉuṭai vaṭivam peṟṟēṉ;
entaikkum entai nīr; yāṉ icaippatu kēṇmiṉ! '' eṉṟāṉ.