கம்பராமாயணம் 3783 · ஆரணிய 10.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது என் - பழித்துக் கூற முடியாத நிலையில் உள்ள உங்களது ஆண்மை பற்றி விரித்துரைத்தல் வேண்டுமா என்ன (வேண்டியதில்லை), பதுமபீடத்துழி - தாமரையாகிய பீடத்தில் (எழுந்தருளியுள்ள); பெருந் தகைமை சான்ற அந்தணன் - பெருமை மிக்க வேதியனாகிய நான்முகன்; உயிர்த்த எல்லாம் - படைத்தவற்றையெல்லாம்; அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும் - அழிப்பதற்கென்றே ஒப்பற்றவனாய் உள்ள சிவபிரான் கூட; ஒழிப்பு அருந் திறல் - அழிப்பதற்கரிய ஆற்றல் கொண்ட; பல் பூத கணத்தொடும் - பல பூதங்களின் கூட்டத்துடன்; உறையும் உண்மை அறிதிர் அன்றே - சேர்ந்திருக்கும் உண்மையை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அன்றோ.
அண்ணலும் - உயர்வு சிறப்பும்மை. அழிப்பதற்கென்றே தனிப் பெருந்திறனாளனாகிய சிவபிரானே பூதகணங்களின் உதவியைப் பெற்றிருக்கிறான் என்பதை எடுத்துக் காட்டி, இராமலக்குவர்கள் துணை வலி நாட வேண்டும் என்பதைக் கவந்தன் வற்புறுத்துகிறான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Your blameless standing and your valour, what need is there to speak of them? Yet of all that the lotus-throned
- Brahmin, full of great dignity, brought to life,
- the lord who is the one destroyer, you surely know,
- dwells together with hosts of many goblins of invincible might: that is the truth."
What the poem says
Kavantaṉ presses his point about allies with an example from the gods. He does not doubt the brothers' courage. But even Śiva, whose role is to destroy everything Brahmā creates, keeps his hosts of powerful goblin attendants with him. If even the great destroyer has helpers, Irāmaṉ and Ilakkuvaṉ should also look for allies.