கம்பராமாயணம் 3786 · ஆரணிய 10.58

Section ஆரணிய காண்டம் / 10. கவந்தன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆனபின் தொழுது , வாழ்த்தி , அந்தரம் அத்து அவனும் போனான்;
மானவக் குமரர் தாம் உம் அத்திசை வழிக் கொண்டு ஏகிக் ,
கானமும் மலையும் நீங்கிக் , கங்குல் வந்து இறுத்த காலை ,
யானையின் இருக்கை அன்ன மதங்கனது இருக்கை சேர்ந்தார் .

பொருள் · Meaning in Tamil

ஆனபின் - அதன்பின்; அவனும் - கவந்தன்; தொழுது வாழ்த்தி - இராம இலக்குவரைத் தொழுது வாழ்த்தி; அந்தரத்துப் போனான் - விண் வழியே போனான்; மானவக் குமரர்தாமும் - மனு மரபில் தோன்றியவர்களாகிய இராமலக்குவரும்; அத் திசை வழிக்கொண்டு ஏகி - கவந்தன் குறித்த இரலை மலை இருந்த திசை நோக்கிய வழியிலே சென்று; கானமும் மலையும் நீங்கி - காடும் மலையும் கடந்து; கங்குல் வந்து இறுக்கும் காலை - இரவு நேரம் வந்து சேர்ந்தபோது; யானையின் இருக்கை அன்ன - யானைகள் இருக்கும் இடம் போன்ற; மதங்கனது இருக்கை சேர்ந்தார் - மதங்க முனிவரது ஆச்சிரமத்தை அடைந்தார்கள்.

மனு மரபில் வந்தவர் மானவர்; வட மொழித் தத்திதாந்த நாமம். மானம் என்பது தமிழில் உயர்வைக் குறிக்கும்; உயர்வுடைய குமரர் என்ற பொருளில் மானவக்குமரர் என்றார் எனலுமாம். இருக்கை - இருக்கும் இடத்தைக் குறிக்கும் தொழிலாகுபெயர். மதங்க முனிவர் யானைகளிடத்துப் பரிவு கொண்டவராய் அவற்றைப் பேணியவர் ஆதலின், அவருடைய ஆச்சிரமச் சூழலில் யானைகள் மிகுதியாக வாழ்ந்தன என்பர். எனவே, யானைகளின் இருப்பிடந்தானோ என்று எண்ணும் வகையில் அவர்தம் ஆச்சிரமம் அமைந்திருந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. After that, worshipping and blessing them, he went away through the sky;
  2. the princes of Maṉu's line set out by the road in that direction,
  3. left forests and hills behind, and as night came on and closed in,
  4. they reached Mataṅkaṉ's dwelling, like a dwelling-place of elephants.

What the poem says

Kavantaṉ bows to the brothers, blesses them and departs into the sky. The princes, descendants of Maṉu, head toward the hill he named. At nightfall they reach the hermitage of the sage Mataṅkaṉ. He was known for his care of elephants, so many lived around his retreat, and it looked like an elephants' home.

This verse ends the Kavantaṉ canto; the next tells of Cavari's release.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṉa piṉ toḻutu, vāḻtti, antarattu avaṉum pōṉāṉ;
māṉavak kumarartāmum atticai vaḻik koṇṭu ēki,
kāṉamum malaiyum nīṅkik, kaṅkul vantu iṟukkum kālai,
yāṉaiyiṉ irukkai aṉṉa mataṅkaṉatu irukkai cērntār.