கம்பராமாயணம் 3785 · ஆரணிய 10.57

Section ஆரணிய காண்டம் / 10. கவந்தன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' கதிரவன் சிறுவன் ஆய கனக வாள் நிறத்தினானை
எதிர் உற தழுவி நட்பின் இனிது அமர்ந்து அவனின் நீண்ட
வெதிர் பொரு தோளினாளை நாடுதல் விழுமிது '' என்றான் ;
அதிர் கழல் வீரர் தாமும் அன்னதே அமையும் என்றார் .

பொருள் · Meaning in Tamil

கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை - சூரியதேவனின் மகனும் பொன்போல ஒளிகொண்ட நிறம் உடையவனும் ஆகிய சுக்கிரீவனை; எதிர் எதிர் தழுவி - ஒருவருக்கொருவர் எதிர் கொண்டு தழுவி; நட்பின் இனிது அமர்ந்து - நட்பிலே இனிது பொருந்தி; அவனின் - அவன் உதவியால்; ஈண்ட - விரைவாக; வெதிர் பொரும் தோளினாளை - மூங்கிலை ஒத்த தோள் கொண்ட சீதையை; நாடுதல் விழுமிது - தேடுவது சிறந்தது; என்றான் - என்று கவந்தன் கூறினான்; அதிர்கழல் வீரர் தாமும் - ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த இராமலக்குவர்களாகிய வீரர்களும்; அன்னதே அமைவது ஆனார் - அவன் சொன்னதையே உடன்பட்டார்கள்.

சுக்கிரீவன் கதிரவன் மைந்தன்; பொன்னிற மேனி உடையவன். நிறத்தினான் என்ற சொல்லுக்கு உடல் உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம். அதிர் கழல் - வினைத்தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "the son of the Sun, of gleaming golden hue:
  2. embrace him face to face, settle gladly into friendship, and with his help, swiftly,
  3. search for her whose shoulders rival the bamboo; that is best," he said;
  4. and the heroes with ringing anklets agreed that this was right.

What the poem says

Kavantaṉ completes his advice. On the hill they will find Cukkirīvaṉ, son of the Sun god, golden in colour. The brothers should embrace him as an equal and make a firm friendship, and with his help search quickly for Cītai, whose shoulders are as smooth and rounded as bamboo. Irāmaṉ and Ilakkuvaṉ accept the plan. The alliance with Cukkirīvaṉ will shape the rest of the epic.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' katiravaṉ ciṟuvaṉ āṉa kaṉaka vāḷ niṟattiṉāṉai
etir etir taḻuvi naṭpiṉ iṉitu amarntu avaṉiṉ īṇṭa
vetir poru tōḷiṉāḷai nāṭutal viḻumitu '' eṉṟāṉ;
atir kaḻal vīrartāmum aṉṉatē amaivatu āṉār.