கம்பராமாயணம் 3790 · ஆரணிய 11.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எந்தை - எம் தந்தையே; ஈசனும் - சிவபெருமானும்; கமலத்தோனும் - தாமரை மலரில் உள்ள நான்முகனும்; இமையவர் யாரும் - தேவர்கள் எல்லாரும்; வாசவன்தானும் - அந்தத் தேவர்களின் தலைவனான இந்திரனும்; ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி - இங்கே வந்து மகிழ்ந்து என்னைப் பார்த்து; ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது - குற்றமற்ற உன் தவத்தின் முடிவான பயன் வந்துறும் காலம் நெருங்கிவிட்டது; இராமற்கு ஆய பூசனை விரும்பி - இங்கு வரவிருக்கும் இராமபிரானுக்குச் செய்ய வேண்டிய பூசையை விரும்பிச் செய்து முடித்து; எம்பால் போதுதி - அதன் பின் எம்மிடம் வந்து சேர்வாயாக; என்று போனார் - என்று சொல்லிப் போயினார்கள்.
தேடிப் போய் அடையப்பட வேண்டிய சிவன் முதலாயினோர் ஒற்றைக் குறிக்கோளில் உறைத்து நின்ற சவரியைத் தேடி வந்தனர்; இது இராமனையே நினைந்து நோற்ற தவத்தின் மேன்மை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Īcaṉ, and the one on the lotus, and all the gods, my father,
- and Vācavaṉ himself came here, looked on me with joy,
- and said, 'The end of your flawless penance has drawn near; gladly perform the worship
- due to Irāmaṉ, and then come to us,' and went away."
What the poem says
Cavari tells Irāmaṉ that Śiva, Brahmā, Indra and all the gods once came to her hermitage. They told her that her penance was nearly complete, and that after she had honoured Irāmaṉ when he came, she should join them in their world. The commentary remarks that gods whom others must seek out came seeking her, so great was the power of a penance devoted wholly to Irāmaṉ.