கம்பராமாயணம் 3792 · ஆரணிய 11.6

Section ஆரணிய காண்டம் / 11. சவரி பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அனகனும் இளைய கோவும் - குற்றம் இலாதவனாகிய இராமபிரானும் இளவலாகிய இலக்குவனும்; அன்று அவண் உறைந்த பின்றை - அன்றைக்கு அந்த மதங்காசிரமத்திலே தங்கியிருந்தபின்; வினை அறு நோன்பினாளும் - இருவினைப் பயனும் நீங்குதற்கு ஏற்ற தவநிலை பெற்றவளாகிய சவரி; மெய்ம்மையின் நோக்கி - (இராமலக்குவரை) மெய்யான அன்போடு பார்த்து; வெய்ய துனை பரித்தேரோன் - வெப்பம் கொண்டதும் விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டப்பெற்றதுமாகிய தேரினைச் செலுத்துவோனாகிய கதிரவனின்; மைந்தன் - மகனாகிய சுக்கிரீவன்; இருந்த - வாழ்ந்து வந்த; அத் துளக்கு இல் குன்றம் - அழிதல் இல்லாத அந்த ருசியமுகம் என்னும் மலையை (அடைதற்குரிய); நினைவு அரிது ஆயற்கு ஒத்த - நினைப்பதற்கு அரியதும் ஆராய்ந்து தெளிந்தால் மட்டுமே தெரியக் கூடியதும் ஆகிய; நெறி எலாம் - வழி முழுவதையும்; நினைந்து சொன்னாள் - எண்ணிப் பார்த்துச் சொன்னாள்.

அனகன் : குற்றம் இல்லாதவன். நோன்பு : தவம். தவத்தின் பயன் இருவினைப் பிணி நீங்குதல்; சவரி அந்த நிலை அடைந்தவள் என்பதை 'வினை அறு நோன்பினாள்' என்ற தொடர் குறித்தது. இனி இரலை மலைக்குப் போகும் வழியைத் தெரிவதே இராமலக்குவர்களின் அவதாரப் பயணத்துக்கு உண்மைப் பயனாகும்; ஆதலின் 'மெய்ம்மையின் நோக்கி' என்றார். இதுவரை நோக்கியது தன் நிலை குறித்தது; இது அவர்கள் அவதாரப் பயணம் குறித்தது. அவ்வழி நினைவிற்கும் கொடுமையானது; மேலும், ஆராய்ந்து தெளிந்தே செல்லுதற்கு உரியது; எனவே, நினைவு அரியது என்றும் ஆயற்கு ஒத்தது என்றும் கூறினார்.

அறு நோன்பு, துனை பரி வினைத் தொகைகள். துளக்கு - முதனிலைத் தொழிற்பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. After the sinless one and the young prince had stayed there that day,
  2. she whose penance had ended all karma looked at them in truth; and the way to
  3. the steadfast hill where the son of him whose chariot runs with swift, hot horses dwelt,
  4. a way hard to imagine and fit only for careful search, she thought out and told in full.

What the poem says

After the brothers have spent the day at the hermitage, Cavari, whose penance has freed her from all karma, gives them careful directions to Ṛṣyamūka hill, where Cukkirīvaṉ, son of the Sun, lives. The route is hard even to picture and must be followed with care, so she thinks it through before speaking. The commentary sees her "true" look as recognizing that this journey is the real purpose of Irāmaṉ's incarnation.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉakaṉum iḷaiya kōvum aṉṟu avaṇ uṟainta piṉṟai,
viṉai aṟu nōṉpiṉāḷum meymmaiyiṉ nōkki, veyya
tuṉai parit tērōṉ maintaṉ irunta at tuḷakku il kuṉṟam
niṉaivu aritu āyaṟku otta neṟi elām niṉaintu coṉṉāḷ.