கம்பராமாயணம் 3798 · கிட்கிந்தா 1.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குவால் மணித் தடம்தொறும் - குவியலாக மணிகளைப் பெற்றிருக்கும் பொய்கையின் இடமெல்லாம்; பவளக்கோல் இவர் கவான் - பவளத்தாலான கோல் போன்ற சிவந்து நீண்ட கால்களையுடைய; அரசு அன்னமும் - அரச அன்னங்களும்; பெடை அன்னமும் - பெண் அன்னங்களும்; காண்டலின் - (சேர்ந்து) காணப்படுவதால்; தவா நெடு வானகம் - அழியாத பெரிய ஆகாயத்திடை; தயங்கு மீனொடு - விளங்குகின்ற விண்மீன்களோடு, உவாமதி உலப்பு இல - அளவற்ற நிறைமதிகள்; உதித்தது ஒப்பது - தோன்றியதைப் போல (அப்பொய்கை) விளங்கியது.
அன்னப்பறவைகளில் சிறந்தது அரச அன்னம். காற்று, நெருப்பு, நீர், நிலம் என்னும் நான்கு பூதங்களுக்கு முன்னர்த் தோன்றி, அவை அழியுமளவும் தான் அழியாமல் இருத்தலால் வானிற்குத் 'தவா' என்னும் அடைமொழி தரப்பட்டது. 'உவாமதி உலப்புஇல' என்பதால் இல்பொருள் உவமை அணி.
பெடைகளால் சூழப்பட்டு விளங்கும் அரச அன்னம் அசுவனி முதலிய விண்மீன்கள் சூழத்தோன்றும் முழுநிலவை ஒத்து விளங்கிற்று. அன்னத்திற்கு வெண்மதியும், பெடை அன்னங்களுக்கு அசுவனி முதலிய விண்மீன்களும் பொய்கைக்கு வானமும் உவமை. அசுவனி முதலிய இருபத்தேழு நட்சத்திரங்களும் சந்திரனுக்கு மனைவியர் என்பது புராணக் கொள்கை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because at every gem-heaped stretch, royal swans with legs like coral rods
- were seen together with their mates,
- it looked like the vast, unperishing sky, where among the twinkling stars
- numberless full moons had risen.
What the poem says
Pairs of royal swans, white birds with long red legs, float all over the lake among their mates. To the poet the scene looks like the sky with countless full moons, each surrounded by stars. The commentary explains the myth behind the image: the twenty-seven lunar mansions are the moon's wives, just as the female swans surround the male. Since the sky never has more than one moon, the comparison is to something that cannot exist.