கம்பராமாயணம் 3799 · கிட்கிந்தா 1.4

Section கிட்கிந்தா காண்டம் / 1. பம்பைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஓதம் நீர் உலகமும் உயிர்கள் யாவையும்
வேத பாரகரையும் விதிக்க வேட்ட நாள் ,
சீதம் நீர் உவரியைச் செகுக்குமாறு , ஒரு
காதி காதலன் தரு கடலின் அன்னது .

பொருள் · Meaning in Tamil

ஒரு - ஒப்பற்ற; காதி காதலன் - காதி என்னும் அரசனின் மகனாகிய விசுவாமித்திரர்; ஓதநீர் உலகமும் - குளிர்ந்த கடலால் சூழப் பட்ட உலகத்தையும்; உயிர்கள் யாவையும் - அவ்வுலகில் வாழும் உயிர்களையும்; வேத பாரகரையும் - வேதங்களைக் கரைகண்டவர்களான முனிவர்களையும்; விதிக்க வேட்ட நாள் - (திரிசங்கு அரசனுக்காக) படைக்க விரும்பிய காலத்தில்; சீதம் வீங்கு உவரியை - (நான்முகன் படைத்த) குளிர்ச்சி மிக்க உப்புக்கடலை; செகுக்குமாறு - வெல்லுமாறு; தரு கடலின் அன்னது - படைத்த நன்னீர்க்கடலை ஒத்திருக்கும்.

பொய்கை இனிய நீரைப் பெற்றிருத்தலால் உப்புக்கடலுக்கு மாறாகப் பூமியினிடைப் படைத்த நன்னீர்க்கடலை ஒத்தது எனப்பட்டது.

காதி காதலன் - காதியின் அன்பிற்கு உரியவன்; விசுவாமித்திரர். வேதபாரகர் - வேதங்களை ஐயந்திரிபறக் கற்றுப் பிறர்க்கு ஓதுவிக்கவும் வல்லவர். முன்னர் 'உவரி' என்றமையால் பின்னர் வரும் கடல் 'நன்னீர்க் கடல்' என்னும் பொருளில் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On the day he longed to create
  2. a world girt by the sea, and all living beings, and masters of the Veda,
  3. the sea that the matchless son of Kāti made to outdo
  4. the cold, swelling salt ocean: such was that lake.

What the poem says

The lake's sweet water recalls a story about Vicuvāmittiraṉ, son of King Kāti. To lift King Triśaṅku to heaven, he set out to create a second universe of his own, with its own world, creatures and sages, and in it he made a sea of fresh water to outdo Brahmā's salt ocean. Pampai is as large, and as sweet, as that rival sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōta nīr ulakamum uyirkaḷ yāvaiyum
vētapārakaraiyum vitikka vēṭṭa nāḷ,
cītam vīṅku uvariyaic cekukkumāṟu, oru
kāti kātalaṉ taru kaṭaliṉ aṉṉatu.