கம்பராமாயணம் 3800 · கிட்கிந்தா 1.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எல்படர் நாகர்தம் இருக்கை - (அப்பொய்கை) ஒளி படர்ந்த நாகர்களின் இருப்பிடம்; ஈது என - இதுதான் என்று; கிற்பது - சுட்டிக்காட்டும்; ஓர் காட்சியது எனினும் - ஒரு தோற்றத்தை உடையதாயினும் (ஆழமுடையதாயினும்); கற்பகம் அனைய - கற்பகத்தரு போன்ற; அக் கவிஞர் - அந்தச் சிறந்த கவிஞர்கள்; நாட்டிய சொற் பொருளாம் என - நிலை நிறுத்திய சொற்களின் பொருள் போல; கீழ்உற - கீழ்உலகம் வரையிலும்; தோன்றல் சான்றது - காணும் தெளிவுடையது;
பொய்கை நாகர் உலகம் தெரிகின்ற அளவு ஆழம் உடையதென்றார். கவிஞர்கள் கூறும் சொற்பொருள்போலத் தெளிவும் ஆழமும் பெற்றிருந்தது. (வடிவிலே தெளிவு; கருத்திலே ஆழம்.
கற்பகத்தரு வேண்டுவார்க்கு வேண்டியன அளித்தல் போல உயர்ந்த கவிஞர்களும் பயில்வார் விரும்பத்தகு நலமிகு கருத்துக்களைக் கொடுக்க வல்லவர்களாதலின் 'கற்பகம் அனையர் எனப்பட்டனர். 'அக்கவிஞர்' என்பதில் அகரச் சுட்டு, புலவர்களின் புகழை உணர்த்தும். கவிஞர்கள் இயற்றிய நூல்கள் ஆழ்ந்த பொருள் கொண்டதாயினும் பயில்வார்க்குத் தெளிவாக விளங்கவைத்தல் போலப் பொய்கை ஆழமுடையதாயினும் தெளிந்த இயல்புடையதாயும் விளங்குகிறது; உவமை அணி. 'சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி' என்று நதிக்குச் சான்றோர் கவிதையை உவமை கூறியிருத்தலை ஆரணிய காண்டத்தும் காணலாம். (2732)
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that one might point and say, 'Here is the home of the radiant Nāgas,'
- though such was its look, right down to the depths below
- it was clear, like the meaning of the words set down by those poets
- who are like the wish-granting tree: it was rich in clarity.
What the poem says
The lake is so deep that it seems to reach down to the underworld of the serpent beings, the Nāgas, yet so clear that one can see to the bottom. The poet compares it to the work of great poets, which has deep meaning yet is clear to the reader. Such poets are like the wish-granting tree, giving every reader what he seeks. The commentary notes that earlier in the epic a river is likewise compared to the poetry of the wise.