கம்பராமாயணம் 3801 · கிட்கிந்தா 1.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கண் அகன் - இடமகன்ற; தளமலர் - இதழ்களையுடைய தாமரை மலர்களில் இருக்கின்ற, களம் நவில் - இனிதாகக் கூவுகின்ற, அன்னமே முதல - அன்னங்கள் முதலான; புள்ளொலி - பறவைகளின் ஒலி; தழங்க - மிகுதியாக ஒலிக்க; இன்னது ஓர் கிளவி என்று - இன்ன பறவையின் ஒலி இஃது என்று; அறிவு அரும் கிளர்ச்சித்து - அறிய முடியாத எழுச்சியினை உடையது; ஆதலின் - அதனால்; வளநகர்க் கூலமே போலும் - (அப்பொய்கை) செல்வம் மிக்க பெரிய நகரங்களில் காணப்படும் கடைவீதியை ஒத்திருக்கும்; மாண்பது - சிறப்பினை உடையது.
பொய்கைக்கு வளநகர்க்கூலமும், பொய்கையில் எழுந்த பறவைகளின் ஒலிக்கு நகரக்கடைத்தெருக்களில் கொள்வாரும் கொடுப்பாருமாய் எழுப்பும் ஒருங்கெழுந்த பேச்சொலியும் உவமைகளாம்; உவமை அணி.
களம், இன்னோசை. 'களங்கொள் இருநேரிசை' (திருநாவுக்கரசர் 337) என்பது பெரியபுராணம். சிறப்புக்கருதி 'மலர்' என்பது தாமரையைக் குறித்தது. ஏகாரம் இரண்டும் இசைநிறை. "பல்வேறு புள்ளின் இசை எழுந்தற்றே, அல்லங்காடி அழிதரு கம்பலை" (மதுரைக்காஞ்சி. 543 - 544), 'பலவும் எண்ணில குழீஇச் சிரம் சிறிதசைத்தும், சிறகையடித்தும் அந்தியங்காடியின் சந்தம் காட்டி' (மனோன்-2-/-/22-124) என்ற அடிகள் ஒப்புநோக்கத்தக்கன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With swans first among them, the birds on the wide-petalled lotus flowers
- raised their sweet cries in such a din that
- no one could tell which voice was which; and so
- it had the grandeur of the market street of a rich city.
What the poem says
The lake rings with the calls of swans and countless other birds perched on the lotuses. The noise is so mixed that no single voice can be picked out, and the poet compares it to the market street of a wealthy city, full of the hubbub of buyers and sellers. The commentary cites a similar image in the Sangam poem Maturaikkāñci, which likens the evening market to the din of many birds.