கம்பராமாயணம் 3802 · கிட்கிந்தா 1.7

Section கிட்கிந்தா காண்டம் / 1. பம்பைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரி மலர்ப் பங்கயம் அத்து அன்னம் , எங்கணும் ,
'புரி குழல் புகு இடம் புகல்கிலாத யாம் ,
திருமுகம் நோக்கலம் , இறந்து தீர்தும் ' என்று
எரி புகுவன எனத் தோன்றும் ஈட்டது .

பொருள் · Meaning in Tamil

எங்கணும் - (அப்பொய்கை) எல்லாப் பக்கத்திலும்; அரிமலர்ப் பங்கயத்து அன்னம் - செந்தாமரை மலர்களில் உள்ள அன்னங்கள்; புரிகுழல் புக்க இடம் - 'சுருண்ட கூந்தலையுடைய சீதை சென்ற இடத்தை, புகல்கிலாத யாம் - (அறிந்து) கூற இயலாத நாங்கள்; திரு முகம் நோக்கலம் - இராமபிரானின் அழகிய திருமுகத்தைப் பாரோம்; இறந்து தீர்தும் என்று - இறந்து ஒழிவோம்' என்று; எரியினில் புகுவன என - நெருப்பில் புகுவனபோல; தோன்றும் ஈட்டது - காணப்படும் தன்மை உடையது;

தமக்கும் சீதைக்கும் தங்குமிடம் தாமரைமலராக விளங்கவும் தம்மால் சீதையிருக்குமிடத்தைக் கண்டறிந்து உரையாமையாகிய குற்றம் தம்மீது இருப்பதாகக் கருதி அன்னங்கள் நெருப்பில் புகுவன போலக் காணப்பட்டன. அன்னங்கள் மீது கவிஞர்தம் கருத்தையேற்றிக் கூறுதலின் இது தற்குறிப்பேற்ற அணியாம். நெருப்பை உவமை கூறியதனால் அரிமலர் எனப்பட்டது. அரி - செம்மை. அலர்ந்த தாமரைக்கு எரியும் நெருப்பு உவமை. "சேறார் சுனைத்தாமரை செந்நீ மலரும்" (திருவாய்மொழி-6-10.2), 'புண்டரிகம் எரிவது போல விரிய' (நளவெண்பா- 1-126) என்னும் அடிகள் ஒப்பு நோக்கத்தக்கன. பங்கயம் - பங்கஜம், நடன முளைப்பது; புரிகுழல் - அன்மொழித்தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Everywhere the swans on the red-flowered lotuses seemed to say,
  2. "We cannot tell where she of the curling tresses has gone;
  3. we will not look upon his lovely face; we will die and be done,"
  4. and they looked as if they were entering a fire: such was its nature.

What the poem says

The swans sitting on the lake's red lotuses look, to the poet, like birds stepping into flames. He invents a reason: Cītai too was linked with the lotus, and the swans, ashamed that they cannot tell Irāmaṉ where she has gone, would rather die than face him. Open red lotuses are often compared to fire in Tamil poetry. Here the poet lends his own thought to the birds, a common figure of speech.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ari malarp paṅkayattu aṉṉam, eṅkaṇum,
'purikuḻal pukka iṭam pukalkilāta yām,
tirumukam nōkkalam, iṟantu tīrtum ' eṉṟu
eriyiṉil pukuvaṉa eṉat tōṉṟum īṭṭatu.