கம்பராமாயணம் 3806 · கிட்கிந்தா 1.11

Section கிட்கிந்தா காண்டம் / 1. பம்பைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொங்கு வெம் கடம் கரி பொதுவின் ஆடலின்
கங்குலின் எதிர் பொரு கலவிப் பூசலின்
அங்கம் நொந்து அலசிய விலையின் ஆய் வளை
மங்கையர் வடிவு என வருந்தும் மெய்யது .

பொருள் · Meaning in Tamil

பொங்கு வெங்கடகரி - (அந்நீர்நிலை) மிக்க வெம்மை வாய்ந்த மதநீரையுடைய யானைகள்; பொதுவின் ஆடலின் - பொதுவாக (நீரில்) மூழ்கி திளைத்தலால்; கங்குலின் எதிர்பொரு - இரவுக் காலத்தில் தம்முள் எதிர்ப்பட்டுச் செய்கின்ற; கலவிப் பூசலில் - புணர்ச்சிப் போரினால்; அங்கம் நொந்து - உறுப்புகள் வருந்தி; அலசிய - சோர்ந்த; ஆய்வளை விலையின் மங்கையர் - ஆய்ந்தெடுத்த வளையல்களை அணிந்த விலைமகளிரது; வடிவு என - உடம்பு போல; வருந்தும் மெய்யது - வருந்தும் வடிவுடையது.

பொருள் கொடுப்பவர்க்கெல்லாம் தம்மை அளிக்கும் விலைமகளிரை உவமை கூறுதற்கு ஏற்ப, 'பொதுவின் ஆடலின்' எனப்பட்டது. மதயானைகள் பல தனித்தனியே இறங்கித் திளைத்தலால் கலங்கிய பொய்கை, ஆடவர் பலரின் புணர்ச்சிப் போரால் வருந்திய விலைமகளிரின் சோர்ந்து மெலிந்த உடம்பு போன்று காணப்பட்டது; எனவே உவமை அணி. எதிர்ந்து என்னும் வினையெச்சம் பகுதி மாத்திரையாய் நின்றது. அலசுதல் - வருந்திச் சோர்தல்; 'இரு உடம்பு அலச நோற்கின்றான்' (2749)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With fierce elephants hot with must all bathing in it alike,
  2. like women who, in the love-battles fought face to face by night,
  3. grow sore in every limb and weary, women for hire wearing fine bangles,
  4. its form looked worn and suffering.

What the poem says

Many elephants in rut have plunged into the lake one after another and churned it up, and it looks battered and exhausted. The poet compares it to the tired body of a courtesan after a night with many lovers. The phrase "bathing in it alike", which can also mean "in common", fits that comparison, since such a woman gives herself to anyone who pays.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṅku veṅ kaṭa kari potuviṉ āṭalil
kaṅkuliṉ etir poru kalavip pūcalil
aṅkam nontu alaciya vilaiyiṉ āy vaḷai
maṅkaiyar vaṭivu eṉa varuntum meyyatu.