கம்பராமாயணம் 3807 · கிட்கிந்தா 1.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விண்தொடர் நெடுவரை - விண்ணளாவிய பெரிய மலைகளிலிருந்து; தேனும் - பெருகிவரும் தேனின் பெருக்கும்; வேழத்தின் - யானைகளின்; வண்டு உளர் - வண்டுகள் மொய்க்கும்; நறுமத மழையும் - மணமுடைய மதநீர்ப்பெருக்கும்; மண்டலால் - (மிக்குவந்து) நிறைந்ததால்; உண்டவர் - (பொய்கையின்) நீரைப்பருகியவர்கள்; பெருங்களி உறலின் - மிக்க களிப்பை அடைவதால்; ஓதியர் - (அப்பொய்கை) கூந்தலழகுடைய மகளிரின்; தொண்டை அம்கனி இதழ் - கோவைப்பழம் போன்ற சிவந்த உதடுகள் போல; தோன்றல் சான்றது - தோன்றல் அமைந்தது.
மலைத்தேனும் மதநீர்ப்பெருக்கும் பொய்கையில் வந்து கலந்துவிடுவதால் அப்பொய்கைநீர் உண்டவர்க்குக் களிப்பைத் தந்தது. அதனால் உண்டவர்க்குக் (முத்தமிடுவார்க்குக்) களிப்பைத்தரும் மகளிர் இதழ்களை ஒத்து விளங்கியது பொய்கை - உவமை; மகளிர் இதழ்க்குத் தொண்டைக்கனி உவமை; எனவே உவமையணி. 'விண்தொடர் நெடுவரை' உயர்வு நவிற்சி அணியாகும்; வரை - இருமடி ஆகுபெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because honey from the tall, sky-touching mountains and the fragrant
- must of elephants, where bees hover, poured into it in abundance,
- those who drank of it were filled with great intoxication, and so it was like
- the lovely lips, red as the ivy-gourd fruit, of women with beautiful hair.
What the poem says
Honey from the mountain hives and the scented must of elephants flow into the lake, so its water makes those who drink it giddy with delight. The poet compares it to a beautiful woman's red lips, which intoxicate whoever kisses them. Ivy-gourd fruit is the standard comparison for red lips. Calling the mountains "sky-touching" is deliberate exaggeration.