கம்பராமாயணம் 3808 · கிட்கிந்தா 1.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆரியம் முதலிய - வடமொழி முதலான; பதினெண் பாடையில் - பதினெட்டு மொழிகளில்; பூரியர் - புலமை இல்லாத புல்லறிவாளர்; ஒருவழி - ஓரிடத்தில்; புகுந்தது ஆம் என - கூடி ஆரவாரிப்பது போல; ஓர்கில கிளவிகள் - (இன்ன பறவையின் குரல் என) ஆராய்ந்து அறிதற்கியலாத ஒலிகள்; ஒன்றோடு ஒப்பு இல - ஒன்றோடொன்று தொடர்பு இல்லாதவனாய்; சோர்வு இல விளம்பும் - ஓய்தலின்றி ஒலிக்கும்; புள் துவன்றுகின்றது - பறவைகள் நெருங்கியிருக்கப் பெற்றது. (அப்பொய்கை).
ஆரியம் முதலிய மொழிகளில் புலமை இல்லாதவர்கள் ஓரிடத்திலிருந்து எவர்க்கும் புரியாத வகையில் ஆரவாரிப்பது போலப் பல்வேறு பறவைகள் பொய்கையில் ஒருங்கிருந்து பிரித்து உணர முடியாத வகையில் ஓய்வில்லாது ஒலித்தன; உவமை அணி; பல பறவைகளின் குரல் தெளிவாகப் பிரித்து அறிய முடியாது இருப்பதால், பல்பகுதிகளிலிருந்து பல மொழி பேசுவோரின் ஆரவாரத்தை உவமையாக்கினார். ஆரியம் - வடமொழி; பாடை - பாஷா என்னும் வட சொல்லின் திரிபு; கிளவி - பேச்சு - ஒலி; விளம்புதல் - பேசுதல் - ஒலித்தல்; புள் - பறவை. பறவைகளின் ஒலிகளுக்கு மொழிகள் ஒலிகள் (சீவக 93) பூரியர் - தம்மைப் பெரியராய்க் கருதும் அற்பர். 'சிறுமை அணியுமாம் தன்னை வியந்து' என்பது குறள் (978)
ஆங்கிலம் · English translationAI
Translation
- As if base men speaking the eighteen tongues, Sanskrit first among them,
- had crowded together into one place,
- with cries no one could make out, none like another,
- tirelessly calling, the birds thronged it.
What the poem says
The lake is crowded with birds of every kind, all calling at once without pause, so that no one call can be told from another. The poet compares the din to a crowd of ignorant, self-important people from the eighteen language regions of India, all shouting together in their different tongues so that no one understands anyone.