கம்பராமாயணம் 3809 · கிட்கிந்தா 1.14

Section கிட்கிந்தா காண்டம் / 1. பம்பைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தான் உயிர்உற - தன்னை உயிர்போல (நினைத்து); தனி தழுவும் பேடையை - சிறப்பாகத் தழுவிக் கொள்ளும் பெண் அன்னத்தை; ஊன் உயிர் பிரிந்தென - உடலிலிருந்து உயிர் பிரிந்தாற்போல; பிரிந்த ஓதிமம் - பிரிந்த ஆண் அன்னம்; வான் அரமகளிர்தம் - (நீராட வரும்) தேவ மகளிரின்; வயங்கு நூபுரம் - விளங்குகின்ற காற் சிலம்பணிகளின்; தேன் உகு மழலையை - தேன் போன்ற இனிய ஓசையை; செவியின் ஓர்ப்பது - (தன் பெடையின் குரல் என்று) செவி கொண்டு கூர்ந்து கேட்பதற்கு (அப்பொய்கை) இடமாயது.

பெண் அன்னத்தைப் பிரிந்த சேவல் அன்னம் பொய்கையில் நீராடவரும் தெய்வமங்கையரின் சிலம்பொலியைத் தனது பெடையின் குரலென மயங்கிக் கேட்கும் என்பது கருத்து. மயக்க அணி. சீதையைப் பிரிந்த இராமனும் அவளை நினைவு படுத்தக்கூடிய குரலைக் கேட்கின் மயங்குவதை இக்காட்சி குறிப்பாக உணர்த்துகிறது.

தான் என்றது சேவல் அன்னத்தினை; ஊன் - தசை - உடம்பிற்கு ஆகுபெயர். நூபுரம் - சிலம்பு; மழலை - இனிய மெல்லோசை; ஓர்த்தல் - நுணித்தறிதல்; அன்பில் சிறந்தது அன்னப்பறவை. 'ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்ன மொத்தும்' (சீவக. 189) என்ற அடிகளைக் காண்க. அன்னத்தின் ஒலிக்கு மகளிர் சிலம்பொலி உவமையாதல் 'அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று இரங்கு வார்புனல் சரயு' என முன்னரும் (335) கவிஞர் கூறியுள்ளார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gander, parted from the mate he embraced as his very life,
  2. parted as life is parted from the body,
  3. listens closely with his ears to the honey-sweet, soft tinkling
  4. of the shining anklets of the heavenly maidens.

What the poem says

A male swan separated from his mate hears the anklets of heavenly women who come to bathe in the lake and takes their tinkling for her voice, listening hard. Swans are proverbial for faithful love, and swans' cries and anklet bells are a standard pair in Tamil poetry. The image quietly mirrors Irāmaṉ, who is also separated from his wife and would be stirred by any sound that recalled her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāṉ uyir uṟat taṉi taḻuvum pēṭaiyai
ūṉ uyir pirinteṉa pirinta ōtimam
vāṉ aramakaḷirtam vayaṅku nūpurat
tēṉ uku maḻalaiyaic ceviyiṉ ōrppatu.