கம்பராமாயணம் 3810 · கிட்கிந்தா 1.15

Section கிட்கிந்தா காண்டம் / 1. பம்பைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஏறிடல் அரிய மால் வரை நின்று ஈர்த்து இழி
ஆறு இடு விரை அகில் ஆரம் ஆதிய
ஊறிட ஒண் நகர் உறைத்த ஒண் தளச்
சேறிடு பரணியில் திகழும் தேசது .

பொருள் · Meaning in Tamil

ஈறு இடல் அரிய - (அப்பொய்கை) எல்லை கூற இயலாத; மால்வரை நின்று - பெரிய மலையிலிருந்து; ஈர்த்து இழி - இழுத்துக் கொண்டு இறங்கிவரும்; ஆறு இடு - அருவிகள் இட்ட; விரை அகில் - மணம் மிக்க அகில்; ஆரம் ஆதிய - சந்தனம் முதலிய (வாசனை மரங்கள்; ஊறிட - (நீரில்) ஊறப்பெறுதலால், ஒள்நகர் உரைத்த - செல்வம் மிக்க நகரமக்கள் அரைத்த; ஒண்தளச்சேறு - ஒள்ளிய சந்தனக்குழம்பை; இடு பரணியின் - இட்டு நிரப்பிய சந்தனக்கிண்ணம் போன்று; திகழும் தேசது - விளங்கும் ஒளியுடையது.

மலை அருவிகளால் கொண்டுவரப்பட்ட மரங்கள் தேய்ந்து ஊறியதால் அப்பொய்கை கலவைச்சந்தனம் கூட்டி வைத்திருக்கும் கிண்ணத்தை ஒத்து விளங்கியது; இஃது உவமை அணி. பொய்கைக்குப் பரணியும், அதிலுள்ள மரங்களின் தேய்வையால் குழம்பிய நீர்க்குச் சந்தனக் குழம்பும் உவமைகளாம். நகரத்திற்கு உரிய சந்தனம் என்பதால் 'ஒள்நகர் உரைத்த' எனப்பட்டது. செல்வமுடைய நகரமக்களே சந்தனம் முதலிய மணப்பொருள்களைக் கொண்டு இன்பம் நுகர்வர்.

பரணி - சந்தனக் கிண்ணம்; நகர் - இடவாகுபெயர். தளம் - சீதளம் என்பதன் முதல் குறை. 'வெண்டளக் கலவைச்சேறு' என்பது நாட்டு வருணனை (43)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Fragrant agil wood, sandal and the like, which the torrents dragged down
  2. from the great mountain whose bounds no one can tell,
  3. lay steeping in it, so it shone with a radiance like a bowl filled with
  4. the bright, cool paste ground by the people of a rich city.

What the poem says

Streams from the vast mountains carry down logs of fragrant aloe wood and sandalwood, which soak in the lake and make its water fragrant and milky. The poet compares the lake to a bowl of sandal paste, the cooling, scented cream that wealthy city people grind and spread on their bodies.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īṟu iṭal ariya māl varai niṉṟu īrttu iḻi
āṟu iṭu virai akil āram ātiya
ūṟiṭa oḷ nakar uṟaitta oṇ taḷac
cēṟu iṭu paraṇiyiṉ tikaḻum tēcatu.