கம்பராமாயணம் 3811 · கிட்கிந்தா 1.16

Section கிட்கிந்தா காண்டம் / 1. பம்பைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நவ்வி நோக்கியர் இதழ் நிகர் குமுதத்து நறுந்தேன்
வவ்வி , மாந்தரில் களி மயக்கு உறுவன மகரம்
எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்னக்
கவ்வும் மீனொடு முழுகின எழுவன கரண்டம் .

பொருள் · Meaning in Tamil

மகரம் - (அப்பொய்கையிலுள்ள) மீன்கள்; நவ்வி நோக்கியர் - மான் நோக்குப்போலும் பார்வையை உடைய மகளிரின்; இதழ் நிகர் - இதழ்போன்ற, குமுதத்து நறுந்தேன் - செவ்வாம்பல் மலர்களிலுள்ள நல்ல தேனை; வவ்வு மாந்தரின் - குடித்து, (மகளிர் இதழ் அமுதம் பருகிய) ஆடவர் போல; களிமயக்கு உறுவன - களிப்பால் மயக்கம் அடைவனவாயின; கரண்டம் - நீர்க்காக்கைகள்; எவ்வம் ஓங்கிய - துன்பம் நிறைந்த; இறப்பொடு பிறப்பு - இறப்பும் பிறப்பும்; இவை என்ன - இத்தன்மையன என உணர்த்த; கவ்வு மீனொடு - வாயில் கவ்விய மீன்களோடு; முழுகி எழுவன - நீரில் முழுகி எழுவனவாயின.

பொய்கையில் மீன்கள், மகளிர் இதழ் பருகிக் களிப்படையும் ஆடவர் போன்று ஆம்பல் மலர்களிலுள்ள தேனை உண்டு மயங்கின. நீர்க்காக்கைகள் மாறிவரும் இறப்பையும் பிறப்பையும் உணர்த்துவன போல அடிக்கடி நீரில் மூழ்கி எழுவனவாய் உள்ளன. பாடலின் முன் இரண்டடியில் உவமை அணியும் பின்னிரண்டு அடிகளில் நீர்க்காக்கைகளின் இயல்பான செயலில் கவிஞன் தன் கருத்தை ஏற்றிக் கூறுவதால் தற்குறிப்பேற்ற அணியும் அமைந்துள்ளன. நீர்க்காக்கைகள் தம் செய்கையால் பிறப்பு, இறப்பின் தத்துவத்தைக் கூட உணர்த்தியதால் காட்சி அணி எனினும் அமையும். பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்' (மணி - 2. 64); 'ஆதலும் அழிவும் எல்லாம் அவை பொருட்கு இயல்புகண்டாய்' (சிந்தா - 269) என்பன காண்க. நவ்வி - மான்; வவ்வுதல் - கவர்தல்; எவ்வம் - துன்பம்; மகரம் - மீன்; கரண்டம் - காரண்டவம்; வடமொழி. இறப்பொடு என்பதில் ஒடு எண்ணுப்பொருளிலும், மீனொடு என்பதில் ஒடு உடனிகழ்ச்சிப் பொருளிலும் வந்துள்ளன. மகரம், கரண்டம் என்பன பால்பகா அஃறிணைப் பெயர்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like men who drink from the lips of doe-eyed women, drinking the fragrant honey of lilies like those lips,
  2. the fish grew dazed with intoxication;
  3. as if to show, "Such are death and birth, so full of pain,"
  4. the cormorants dived and rose again with the fish they had seized.

What the poem says

Two more scenes from the lake. The fish sip honey from red water lilies and become tipsy, like lovers who kiss the lips of beautiful women, which the lilies resemble. The cormorants keep diving under and coming up again with fish in their beaks. The poet reads this as a lesson on the endless round of death and rebirth, in which a soul sinks and rises again and again.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1navvi nōkkiyar itaḻ nikar kumutattu naṟun tēṉ
vavvu māntariṉ kaḷi mayakku uṟuvaṉa makaram
evvam ōṅkiya iṟappoṭu piṟappu ivai eṉṉa
kavvu mīṉoṭu muḻukiṉa eḻuvaṉa karaṇṭam.