கம்பராமாயணம் 3812 · கிட்கிந்தா 1.17

Section கிட்கிந்தா காண்டம் / 1. பம்பைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கவள யானை அன்னாற்கு அந்தக் கடி நறும் கமலம் அத்து
அவளை ஈகிலம் , ஆவது செய்தும் , என்று அருளித்
திவள அன்னங்கள் திரு நடை காட்டுவ , செம் கண்
குவளை காட்டுவ , துவர் இதழ் காட்டுவ குமுதம் .

பொருள் · Meaning in Tamil

கவள யானை அன்னாற்கு - கவளங் கவளமாக உண்ணும் இயல்புடைய யானையை ஒத்த இராமபிரானுக்கு; அந்தக் கடிநறும் கமலத்தவளை - அந்த மணம்மிக்க செந்தாமரை மலரிலுள்ள திருமகளை (சீதையை); ஈகிலம் - கொண்டு வந்து சேர்க்கும் திறமை இல்லோம்; ஆவது செய்தும் - (எனினும்) இயன்ற உதவியைச் செய்வோம் என்று; அருளால் - இரக்கத்தால்; அன்னங்கள் - (அப் பொய்கையில் உள்ள) அன்னங்கள்; திவள - துவளும்படியாக; திரு நடை காட்டுவ - (சீதையின் நடையழகைக்) காட்டுவனவாயின; குவளை - குவளை மலர்கள்; செங்கண் காட்டுவ - செவ்விய கண்களின் அழகைக் காட்டுவனவாயின; குமுதம் - குமுதமலர்கள்; துவர் இதழ் காட்டுவ - செந்நிறம் வாய்ந்த இதழின் அழகைக் காட்டுவனவாயின.

சீதையைக் கொண்டு வந்து சேர்க்கும் திறன் இல்லாததால், இயன்ற உதவியைச் செய்வோம் எனக்கருதி அன்னங்கள் சீதையின் நடையழகையும், குவளை விழியழகையும், குமுதம் இதழழகையும் காட்டின.

யானை அன்னான் - இராமன். கம்பீரமான தோற்றம், நடை, வலிமை பற்றி யானை உவமையாயிற்று. திருமகளே சீதையாக அவதரித்ததால் 'கமலத்தவள்' எனப்பட்டனள். "போதினை வெறுத்து அரசர் பொன்மனை புகுந்தாள்" என்றார் முன்னரும். (1151) கவளம் : வாயளவு கொண்ட உணவுத்திரள். பாடல் தற்குறிப்பேற்ற அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "To him who is like an elephant that feeds by mouthfuls, the lady of the fragrant lotus
  2. we cannot give back; we will do what we can," so, in their kindness,
  3. the swans, swaying, showed him her graceful walk; her red-lined eyes
  4. the blue lilies showed; her coral lips the water lilies showed.

What the poem says

The lake's creatures seem to pity Irāmaṉ, who walks with the stately majesty of an elephant. They cannot bring Cītai back to him, so they do what they can and show him reminders of her. The swans imitate her graceful walk, the blue lilies her eyes and the red water lilies her lips. Cītai is called the lady of the lotus because she is the goddess Lakṣmī born on earth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kavaḷa yāṉai aṉṉāṟku antak kaṭi naṟuṅ kamalat
tavaḷai īkilam, āvatu ceytum, eṉṟu aruḷāl
tivaḷa aṉṉaṅkaḷ tiru naṭai kāṭṭuva, ceṅ kaṇ
kuvaḷai kāṭṭuva, tuvar itaḻ kāṭṭuva kumutam.