கம்பராமாயணம் 3813 · கிட்கிந்தா 1.18

Section கிட்கிந்தா காண்டம் / 1. பம்பைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பெய்கலன்களின் இலங்கு ஒளி - தான் அணிந்திருந்த அணிகலன்களின் விளங்குகின்ற ஒளியானது; மருங்கொடு பிறழ - எல்லாப்பக்கங்களிலும் ஒளி வீச; வைகலும் புனல்குடைபவர் - நாள்தொறும் புனலில் துளைந்து நீராடுபவர்களாகிய; வான் அர மகளிர் - தேவ மகளிரின்; செய்கை அன்னங்கள் - (விளையாடுவதற்காகச்) செய்யப்பட்ட செய்கை அன்னங்களை; ஏந்திய சேடியர் என்ன - கைகளில் ஏந்தி நிற்கும் தோழியர் போல; பொய்கை அன்னங்கள் - பொய்கையிலுள்ள அன்னங்களை; ஏந்திய பூங்கொம்பர் - ஏந்தி நிற்கின்ற மலர்க்கொம்புகள்; பொலிவ - விளங்கின.

தேவமகளிர் புனலில் குடைந்து ஆடியதால் அஞ்சி பொய்கை அன்னங்கள் அஞ்சி எழுந்து அருகில் உள்ள மலர்க்கொம்புகளில் தங்கின. அதனால் செயற்கை அன்னங்களைக் கையில் ஏந்திய தேவமகளிரின் தோழியர்போல மலர்க்கொம்புகள் காட்சி அளித்தன. பொய்கை அன்னத்திற்குச் செய்கை அன்னமும் கரையிலுள்ள மலர்க்கொம்புகளுக்கு தோழியரும் ஒப்பு. இஃது உவமை அணியாம்.

பெய்தல் - அணிதல்; கலன்கள் - அணிகலன்; செய்கை அன்னம் - செயற்கை அன்னம் - விளையாடுதற்குரிய பதுமை; வானரமகளிர் நாள்தொறும் வந்து நீராடுவர் என்றதனால் பம்பையின் பெருமை புலனாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the light of the jewels they wore flashing on every side,
  2. the heavenly maidens bathe in its water day after day;
  3. like their maids who hold the toy swans that were made for them,
  4. the flowering branches that held the lake's swans shone.

What the poem says

When celestial women come to bathe and splash in the lake, the swans fly up in alarm and perch on the flowering branches along the shore. The poet compares the branches, each holding a swan, to the maids who stand by with the women's toy swans. That heavenly beings bathe here every day shows how splendid Pampai is.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pey kalaṉkaḷiṉ ilaṅku oḷi maruṅkoṭu piṟaḻa,
vaikalum puṉal kuṭaipavar vāṉ aramakaḷir,
ceykai aṉṉaṅkaḷ ēntiya cēṭiyar eṉṉap
poykai aṉṉaṅkaḷ ēntiya pūṅ kompar poliva.