கம்பராமாயணம் 3814 · கிட்கிந்தா 1.19

Section கிட்கிந்தா காண்டம் / 1. பம்பைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏலும் நீர் - பொருந்திய நீரில்; நிழல் இடை இடை எறித்தலின் - (மரங்களிலுள்ள கொக்குகளின் நிழல் இடையிடையே விளங்குதலாலே; படிகம் போலும் வார்புனல் - பளிங்கு போன்று விளங்கும் மிக்க நீரினுள்; புகுந்துளவாம் என - (கொக்குகள் தம்மை உண்ணப்) புகுந்துள்ளன என்று எண்ணி; பொங்கி ஆலும் மீன்கணம் - (இயல்பாகத்) துள்ளி விளையாடும் மீன் கூட்டங்கள்; அஞ்சின அலமர - அஞ்சி வருத்தமடையுமாறு; குரண்டம் - கொக்குகள்; வஞ்சிக் கூலமா மரத்து - கரையிலுள்ள பெரிய வஞ்சி மரத்திடை; இருஞ்சிறை புலர்த்துவ - (தம்) பெரிய சிறகுகளை உலர்த்திக் கொண்டிருப்பனவாயின.

கரையருகே உள்ள மரங்களில் கொக்குகள் தம் சிறகுகளை உலர்த்திக் கொண்டிருக்க, அவற்றின் நிழல் நீரில்பட, அந்நிழலைக்கண்ட மீன்கள் தம்மை உண்பதற்காக நீரினுள் கொக்குகள் புகுந்துவிட்டன என்றெண்ணி மயங்கின என்பதாம்; மயக்க அணி.

தெளிவுடைமை பற்றிப் பளிங்குபோலும் புனல் என்றார். குரண்டம் - கொக்கு; கூலம் - கரை; வஞ்சி - மரவகையுள் ஒன்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As their shadows fell here and there upon the ample water,
  2. taking them to have entered the long stream clear as crystal, the shoals
  3. of leaping, playing fish took fright and darted about, while on the great vañci trees
  4. along the bank the herons dried their broad wings.

What the poem says

Herons perch on the trees by the shore, spreading their wings to dry. Their shadows fall on the clear water, and the fish, mistaking the shadows for the birds themselves diving in to catch them, scatter in fear. The poet uses this to show how clear the lake is, and the commentary names the figure as one of mistaken perception.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēlum nīr niḻal iṭai iṭai eṟittaliṉ, paṭikam
pōlum vār puṉal pukuntuḷavām eṉap poṅki,
ālum mīṉ kaṇam añciṉa alamara, vañcik
kūla mā marattu iruñ ciṟai pularttuva kuraṇṭam.