கம்பராமாயணம் 3815 · கிட்கிந்தா 1.20

Section கிட்கிந்தா காண்டம் / 1. பம்பைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அங்கு ஒர் பாகத்தில் , அஞ்சன மணி நிழல் அடையப் ,
பங்கு பெற்று அதில் , பதுமராகத்து ஒளி பாயக் ,
கங்குலும் பகலும் எனப் பொலிவு எய்து கரைய ;
மங்கைமார் தடமுலை எனப் பொலிவன வாளம் .

பொருள் · Meaning in Tamil

அங்கு ஓர் பாகத்தில் - அப்பொய்கைக் கரையின் ஒரு பக்கத்தில்; அஞ்சன மணி நிழல் அடைய - நீலமணியின் ஒளி படிவதாலும்; பங்கு பெற்ற ஒளிர் பதுமராகத்து ஒளி பாய - மற்றொரு பகுதியில் பதுமராகத்தின் ஒளி பாய்வதாலும்; கமலம் - தாமரை மலர்கள்; கங்குலும் பகலும் எனப் பொலிவன - இரவு போலவும் பகல் போலவும் (ஒரே சமயத்தில் அழகுடன் விளங்கின; வாளம் - இணையாக உள்ள சக்கரவாகப் பறவைகள்; மங்கையர் தடமுலை எனப் பொலிவன - பெண்களின் பெரிய தனங்களைப் போல அழகுபெற்றன.

இருளில் குவிவதும், ஒளியில் மலர்வதும் தாமரையின் இயல்பு; நீல மணியின் காரொளி படும் பகுதியில் குவிந்தும், பதுமராகத்தின் செவ்வொளி படும் பகுதியில் மலர்ந்தும் தாமரைகள் விளங்கின என்கிறார். இணை பிரியாத தன்மை கொண்ட சக்கரவாகப் பறவைகள் மகளிர் மார்பகம் போலப் பொலிந்தன என்கிறார்.

பகலும்மென - விரித்தல் விகாரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In one part of it, where the shadow of sapphires fell,
  2. and where the light of rubies, shining each in its own place, spread,
  3. the lotuses looked as though it were night and day at once;
  4. the cakravāka pairs looked like the full breasts of young women.

What the poem says

Gems line the shores of the lake. Where dark sapphires cast their light the lotuses stay closed, as they do at night, and where rubies cast their red glow the lotuses open as if it were day, so night and day seem to exist side by side. The cakravāka birds, which always go in pairs, sit together on the water and recall a woman's breasts, a conventional comparison in Tamil poetry.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṅku ōr pākattil, añcaṉamaṇi niḻal aṭaiya,
paṅku peṟṟu oḷir patumarākattu oḷi pāya,
kaṅkulum pakalum eṉap polivaṉa kamalam;
maṅkaimār taṭa mulai eṉap polivaṉa vāḷam.