கம்பராமாயணம் 3816 · கிட்கிந்தா 1.21

Section கிட்கிந்தா காண்டம் / 1. பம்பைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வலி நடத்திய வாள் என - வலிமையோடு வீசிய வாளாயுதம் போன்று; வாளைகள் பாய - (அப்பொய்கையில்) வாளை மீன்கள் பாய்ந்து செல்ல; ஒலி நடத்திய திரைதொறும் - ஒலித்துக் கொண்டு செல்வதாகிய அலைகளிடையே; உகள்வன நீர்நாய் - உருண்டு செல்வனவாகிய நீர் நாய்கள்; கலி நட - (சதங்கை) ஒலிக்கும் நடையுடைய; கழைக் கண்ணுளர் என - கழைக்கூத்தாடிகள் போல; நடம் கவின - (அவ்வாளைமீன்களின் மேல்) நடனத்தை அழகியதாகச் செய்ய; தேரைகள் - (அதைக்கண்ட) தவளைகள்; பொலிவுடைத்தென - நடனம் நன்றாய் இருக்கின்றதென; புகழ்வன போலும் - புகழ்ந்து பேசுவன போன்றன.

வாளைகள் பாய்தலும் நீர்நாய்கள் அலைகளிடையே உருண்டு செல்லுதலும், தவளைகள் ஒலித்தலும் ஆகிய நிகழ்ச்சிகளால் பொய்கை, கழைக்கூத்து நடைபெறும் இடம்போல் விளங்கிற்று. அலை கயிற்றுவடமாகவும், நீர்நாய்கள் கயிற்றின் மேல் நடக்கும் கழைக்கூத்தாடிகளாகவும், வாளை பாய்தல் கழைக்கூத்தாடிகள் வீசும் வாளின் வீச்சாகவும், தவளைகளின் ஒலி பாராட்டுரையாகவும் கற்பனை செய்யப்பட்டன. தவளையின் ஒலி பாராட்டுரையாகத் தோன்றியது தற்குறிப்பேற்ற அணியாகும். வாளை பாய்தலுக்கு வாள் வீச்சு உவமையாதல் 'வாளென வாளை பாய்வன' (1180) 'வாளென வாளைபாய (2583) எனச் சிந்தாமணியும் 'வாளை வாளிற் பிறழ' (390) என நற்றிணையும் உரைப்பதில் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the vāḷai fish leapt like swords swung with strength,
  2. otters rolled over on every roaring wave;
  3. like pole-dancers with jingling steps they danced so beautifully
  4. that the frogs seemed to praise them, crying, "How splendid!"

What the poem says

The lake becomes a circus. Silvery fish leap like flashing swords, and otters tumble along the waves like acrobats walking a rope. The croaking of the frogs sounds like an audience applauding. The comparison of leaping fish to swords is old in Tamil poetry, and the commentary cites examples from Cīvakacintāmaṇi and Naṟṟiṇai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vali naṭattiya vāḷ eṉa vāḷaikaḷ pāya,
oli naṭattiya tiraitoṟum ukaḷvaṉa nīrnāy,
kalinaṭak kaḻaik kaṇṇuḷar eṉa naṭam kaviṉa
polivu uṭaittu eṉat tēraikaḷ pukaḻvaṉapōlum.