கம்பராமாயணம் 3817 · கிட்கிந்தா 1.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்னது ஆகிய - அத்தன்மையுடையதான; அகன்புனல் பொய்கையை - மிக்க நீரை உடைய பொய்கையை; அணுகி - நெருங்கி; கன்னி அன்னமும் - இளமையான அன்னங்கள்; கமலமும் முதலிய - தாமரை மலர்கள் முதலானவற்றையும்; கண்டான் - (இராமன் கண்டு; தன்னின் நீங்கிய - தன்னைப் பிரிந்து சென்ற; தளிர் இயற்கு - இளந்தளிர் போன்ற மென்மையை உடைய சீதை பொருட்டு; உருகினன் தளர்வான் - மனம் உருகி வருந்துபவனாய்; உன்னும் நல் உணர்வு - ஆராய்ந்தறிதற்கு உரிய நல்லறிவு; ஒடுங்கிட - ஒடுங்கிவிட, புலம்புதல் உற்றான் - புலம்பத் தொடங்கினான்.
அன்னமும் கமலமும் சீதையின் நடையழகையும், முகப்பொலிவினையும் நினைவுபடுத்தியதால் இராமன் புலம்பத் தொடங்கினான். அன்னமும் கமலமும் கொண்டு நடை, முகம் கூறிய கவிஞர் அவளது பிற உறுப்புக்களை நினைவுபடுத்தும் குவளை, கொடி முதலியவற்றை 'முதலிய' என்றதால் பெறவைத்தார். இராமபிரான் திருமாலின் அவதாரமாக இருந்தும் மானிடப் பிறவியை ஏற்றதால் இவ்வாறு புலம்பலானான் என்க. தளிரியல் - உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை; முதலிய - பலவின்பால் பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Drawing near to that lake of wide waters,
- he saw the young swans, the lotuses and all the rest,
- and melted for her, tender as a young shoot, who had gone from him; growing faint,
- as the good sense that reflects sank away, he began to lament.
What the poem says
Irāmaṉ now comes to the shore himself. The swans remind him of Cītai's walk and the lotuses of her face, and everything else of her other beauties. He is overcome, his clear judgement fails, and he breaks into a lament. The commentary explains that although he is Viṣṇu incarnate, he has taken on a human life and so grieves as a man would.