கம்பராமாயணம் 3821 · கிட்கிந்தா 1.26

Section கிட்கிந்தா காண்டம் / 1. பம்பைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஓடாநின்ற களி மயிலே ! சாயற்கு ஒதுங்கி , உள் அழிந்து
கூடாதாரில் திரிகின்ற நீயும் ஆகம் குளிர்ந்தாயோ !
தேடா நின்ற என் உயிரைத் தெரியக் கண்டாய் ! சிந்தை உவந்து
ஆடா நின்றாய் , ஆயிரம் கண் உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ ?

பொருள் · Meaning in Tamil

ஓடாநின்ற களிமயிலே - ஓடி மகிழ்கின்ற மயிலே! சாயற்கு ஒதுங்கி - (சீதையின்) சாயலுக்குத் தோற்று; உள் அழிந்து - மனம் வருந்தி; கூடாதாரின் - பகைவரைப்போல; திரிகின்ற நீயும் - திரிகின்ற நீயும்; ஆகம் குளிர்ந்தாயோ - (இப்போது சீதை இல்லாமை பற்றி) மனம் குளிர்ந்தனையோ? தேடா நின்ற என் உயிரை - தேடிக்கொண்டிருக்கும் என் உயிர்போன்ற சீதையை; தெரியக் கண்டாய் - (முன்பு) கண்ணாரக் கண்டிருப்பாய்; சிந்தை உவந்து ஆடா நின்றாய் - (எனினும் இப்போது என் நிலைகண்டு மனமிரங்காது) மனம் மகிழ்ந்து ஆடுகின்றாய்; ஆயிரம்கண் உடையாய்க்கு - ஆயிரம் கண்களை உடைய உனக்கு; ஒளிக்கும் ஆறு உண்டோ? - (தெரியாமல்) மறையும் வழியும் உண்டோ? (இல்லை).

ஒதுங்குதல் - தோல்வியுறுதல்; கண் - பீலிக்கண்கள். ஆயிரம் என்றது பல என்னும் பொருளைத் தந்தது. இயற்கையில் மயில் மகிழ்ந்து ஆடுதற்குச் சீதை பிரிந்து போனதை அறிந்தும் இரங்காது மகிழ்ந்ததாகக் கூறியது தற்குறிப்பேற்ற அணியாம். "நாணின தொகுபீலி கோலின நடம் ஆடல், பூணியல் நின சாயல் பொலிவது பல கண்ணின் காணிய எனல் ஆகும். களிமயில் - இவை காணாய்" (2002) என்ற அடிகளை ஒப்புநோக்குக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "O joyful peacock running about! You who, beaten by her grace and sick at heart,
  2. wandered like an outcast, are you now cooled and at ease?
  3. You clearly saw her I am seeking, my very life! Glad at heart
  4. you dance; with a thousand eyes, could anything be hidden from you?"

What the poem says

Irāmaṉ turns to a dancing peacock. Its grace was always outshone by Cītai's, so it went about sulking, and now it seems to dance for joy that its rival is gone. With the "thousand eyes" on its tail it must have seen where she went, yet it says nothing. The peacock's natural dancing is given a spiteful motive: the poet's own invented reason, a recognized figure of speech.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōṭāniṉṟa kaḷi mayilē! cāyaṟku otuṅki, uḷ aḻintu
kūṭātāriṉ tirikiṉṟa nīyum ākam kuḷirntāyō!
tēṭāniṉṟa eṉ uyirait teriyak kaṇṭāy! cintai uvantu
āṭāniṉṟāy, āyiram kaṇ uṭaiyāykku oḷikkumāṟu uṇṭō?