கம்பராமாயணம் 3825 · கிட்கிந்தா 1.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொடிவள்ளாய் - வள்ளைக் கொடியே! மலர்க்கொம்பு அனைய - பூங்கொம்பைப் போன்ற, மடச் சீதை - மடமைக் குணம் பொருந்திய சீதையின்; காதே - காதே ஆவாய்; மற்று ஒன்று அல்லை ஆல் - பிறிதொன்றில்லை; ஆதலால்; அலக்கண் உற்றேற்கு - (சீதையைப் பிரிந்து) துன்புறும் எனக்கு; உற்று உதவற்கு - நெருங்கிய உதவுதற்கு; அடைவு உண்டு அன்றோ - இயைபு உண்டு அல்லவா? பொலக்குண்டலமும் - (அங்ஙனமிருக்கவும்) பொன்னால்செய்த குண்டலத்தையும், கொடுங்குழையும் - வளைந்த காதணியையும்; புனை தாழ்முத்தின் பொன்தோடும் - அழகிய தொங்குகின்ற முத்துக்களை உடைய பொன்தோட்டினையும்; விலக்கி வந்தாய் - நீக்கி வந்தாய்; காட்டாயோ? - (அவற்றை அணிந்து) காட்டமாட்டாயா?; இன்னும் பூசல் விரும்புதியோ - மேலும் பகையினை விரும்புவாயோ?
'நீ வடிவத்தால் சீதையின் காதை ஒத்திருப்பதால் குண்டலம், குழை, தோடு ஆகியவற்றை அணிந்திருப்பின், நான் உன்னைக் கண்டு ஒருவாறு ஆறுதல் அடைந்திருப்பேன். நீ அவற்றை நீக்கி வந்தாய்; காதுகளால் சீதை உனது அழகை அழித்தாள் என்ற பழம் பகைமைகொண்டு துன்புற்று வருந்தும் எனக்கு உதவாமல் இருப்பது விரும்பத்தக்கதன்று' என்று இராமன் வள்ளைக்கொடியொடு வருந்தினான்.
அலக்கண் - துன்பம்; சீதையின் பிரிவால் ஏற்பட்டது; மலர்க்கொம்பு - கொம்பு மேனிக்கும், மலர் - கண், கை, கால், முகம் முதலிய உறுப்புக்களுக்கும் உவமை; மடமை - எல்லாம் அறிந்தும் அறியாதது போலிருக்கும் தன்மை, குண்டலம், குழை, தோடு என்பன மகளிர் காதணிகள். குழை - தளிர் வடிவமான காதணி. தொங்கட்டான் என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Is there not a bond that should move you to come close and help me in my grief, O vaḷḷai creeper?
- You are nothing other than the ear of tender Cītai, who is like a flowering bough;
- yet the golden kuṇṭalam, the curved kuḻai, and the fine gold tōṭu hung with pearls,
- you have put them off and come here; will you not show them? Do you still want a quarrel?
What the poem says
At Pampā lake Irāmaṉ, grieving for Cītai, addresses the vaḷḷai creeper, whose curled leaf poets compare to a woman's ear. Since it looks like Cītai's ear, he says, it ought to comfort him by wearing her earrings; instead it comes bare, as if it still nursed an old grudge against her for having outshone it in beauty.
Kuṇṭalam, kuḻai and tōṭu are three kinds of women's ear ornaments; the kuḻai is shaped like a young leaf.