கம்பராமாயணம் 3834 · கிட்கிந்தா 1.39

Section கிட்கிந்தா காண்டம் / 1. பம்பைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பூ ஒடுங்கின - (இரவு வருதலும்) மலர்கள் குவிந்தன; பொழில்கள் - சோலைகளில்; விரவுபுள் ஒடுங்கின - வந்து கலந்த பறவைகள் தத்தம் இடங்களில் போய் அடங்கின; மா ஒடுங்கின - விலங்குகள் தம் செயல் அடங்கின; மரனும் இலை ஒடுங்கின - மரங்களும் இலைகள் குவியப் பெற்றன; கிளிகள் நா ஒடுங்கின - கிளிகள் பேசுதல் இன்றி அடங்கின; மயில்கள் நடம் ஒடுங்கின - மயில்கள் ஆடுதல் ஒழிந்தன; குயில்கள் கூ ஒடுங்கின - குயில்கள் இனிமையாகக் கூவுதலை நிறுத்தின; களிறு பிளிறு குரல் ஒடுங்கின - யானைகள் பிளிறுதலாகிய பேரொலி அடங்கின.

ஒடுங்குதல் - உறக்கம் கொண்டு ஒடுங்குதல்; ஒடுங்குதல் என்ற சொல் ஒரே பொருளில் பலமுறை வந்ததால் சொற்பொருள் பின்வரு நிலையணியாகும். மரனும் என்ற இழிவு சிறப்பும்மை அதன் ஓரறிவுடைமையைக் குறித்தது. கூ - முதனிலைத் தொழிற்பெயர்; பிளிறு குரல் - வினைத்தொகை; இப்பாடல் சுந்தரகாண்டம் 158 ஆம்பாடலை ஒத்திருத்தல் காண்க. (4992)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The flowers closed; the birds gathered in the groves settled down;
  2. the beasts grew still; even the trees folded their leaves; the parrots'
  3. tongues fell silent; the peacocks' dance ceased; the cuckoos'
  4. calls died away; the bull elephants' trumpeting ceased.

What the poem says

A picture of nightfall around the lake: everything that was active by day folds up and falls still. Flowers close, birds go to roost, animals stop moving, parrots stop chattering, peacocks stop dancing, cuckoos stop singing, and elephants stop trumpeting.

The same verb, "to fold up, subside," is repeated in the same sense for every creature, a figure of repetition. The commentary notes that a verse in the Cuntara Kāṇṭam closely resembles this one.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pū oṭuṅkiṉa; viravu puḷ oṭuṅkiṉa, poḻilkaḷ;
mā oṭuṅkiṉa; maraṉum ilai oṭuṅkiṉa; kiḷikaḷ,
nā oṭuṅkiṉa; mayilkaḷ naṭam oṭuṅkiṉa; kuyilkaḷ
kū oṭuṅkiṉa; piḷiṟu kural oṭuṅkiṉa kaḷiṟu.