கம்பராமாயணம் 3833 · கிட்கிந்தா 1.38

Section கிட்கிந்தா காண்டம் / 1. பம்பைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அந்தியாள் வந்து , தான் அணுக , அங்கு அணுகு உறாச்
சந்தம் ஆர் கொங்கையாள் தனிமைதான் நாயகன்
சிந்தியா நொந்து தேய்பொழுது தெறு சீத நீர்
இந்து வான் உந்துவான் எரி கதிரினான் என .

பொருள் · Meaning in Tamil

அந்தியாள் - அந்திப்பொழுதாகிய பெண்; வந்துதான் அணுகவே - வந்து சேரவே; அவ் வயின் - அப்போது; சந்தவார் கொங்கையாள் - அழகிய கச்சணிந்த தனங்களை உடைய சீதை; தனிமைதான் - பிரிந்து தனியே இருக்கும் நிலையினை; நாயகன் சிந்தியா - இராமன் நினைத்து; நொந்து தேய்பொழுது - மனம்வருந்தி வாடும் போது; தெறுசீத நீர் இந்து - வருத்துகின்ற குளிர்ந்த தன்மையை உடைய சந்திரன்; எரி கதிரினான் என - வெய்ய கதிர்களை உடைய சூரியன் போல; வான் உந்துவான் - வானத்தில் எழுவானாயினான்.

அந்தியாள் - மாலைக்காலமாகிய பெண்; 'அந்தியென்னும் பசலை மெய்யாட்டி' என்பது மணிமேகலை. (5-140). பிரிந்தார்க்குக் குளிர்ந்த பொருள்களுக்கு வெப்பம் தருமாதலின் சந்திரனும் சூரியன்போல வெப்பமுண்டாகத் தோன்றினான் என்றார். 'காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலைமலரும் இந்நோய்' (குறள் 1227) என்றபடி மாலையில் ஆசை மிகுதியால் இராமனுக்குத் தனிமைத்துன்பம் அதிகமாயிற்று. என - உவம உருபு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lady Evening came and drew near; then,
  2. as the husband thought of the loneliness of her whose breasts are bound in a lovely band,
  3. and pined and wasted away, the moon with its tormenting cool rays
  4. rose into the sky like the sun with its burning beams.

What the poem says

Evening is pictured as a woman arriving. With nightfall Irāmaṉ's thoughts turn to Cītai alone in captivity, and he wastes with pain. Then the moon rises, but to a parted lover cool things burn, so it feels to him like a second sun.

The commentary cites the Tirukkuṟaḷ: love-sickness buds in the morning, opens through the day, and flowers fully at evening. That is why his loneliness is sharpest now.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1antiyāḷ vantu, tāṉ aṇukavē, av vayiṉ
canta vār koṅkaiyāḷ taṉimaitāṉ nāyakaṉ
cintiyā nontu tēy poḻutu teṟu cīta nīr
intu vāṉ untuvāṉ eri katiriṉāṉ eṉa.