கம்பராமாயணம் 3832 · கிட்கிந்தா 1.37

Section கிட்கிந்தா காண்டம் / 1. பம்பைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அன்னமாய் - அன்னப்பறவையின் வடிவெடுத்து; அருமறைகள் பாடினான் - அறிவதற்கு அரிய வேதங்களை (நான்முகனுக்கு) உபதேசம் செய்த திருமாலின் அவதாரமான இராமபிரான்; நீடுநீர் ஆடினான் - (அப்பொய்கையில்) மிக்க நீரில் நீராடி, முன்னை நூல்நெறி முறையின் - பழைய வேதங்களில் கூறிய நெறிப்படி; நேமிதாள் சூடினான் - திருமாலின் பாதங்களை வணங்கி, முனிவர்தம் தொகுதிசேர் - முனிவர்களின் கூட்டம் பொருந்திய; சோலைவாய் மாடுதான் - சோலையின் ஒருபக்கத்தில், வைகினான் - தங்கியிருந்தான்; எரிகதிரும் வைகினான் - எரிக்கும் கதிர்களையுடைய கதிரவனும் மறைந்தான்.

திருமால் தன் திருவடிகளைத் தானே சூடினான் என்பது திருமால் தான் எடுத்த மானிடத்தோற்றத்திற்கு ஏற்றபடி, தன்னைத்தான் வணங்கினான் என்க. 'அன்னமாய் அருமறைகள் அறைந்தாம் நீ' என்று முன்னரும் (2575) கூறப்பட்டது. "அன்னமாய் நூல் பயந்தாற் காங்கிதனைச் செப்புமினே" (பெரிய. திருமொழி. 9-4-2) எனும் தொடரை ஒப்புநோக்குக. இராமன் திருமாலின் அமிசமாதலின் திருமாலின் செயல்கள் இராமன் செயல்களாகக் கூறப்பட்டன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who once, as a swan, sang the rare Vedas bathed;
  2. in the deep water, following the rule of the ancient scriptures, he set upon his head the feet of the discus-bearer;
  3. then beside a grove where hosts of sages gathered
  4. he stayed for the night; and the blazing sun too went to rest.

What the poem says

Irāmaṉ bathes and worships Tirumāl, then settles for the night in a grove where sages live, as the sun sets. The poet calls him the one who, in the form of a swan, taught the Vedas to Brahmā, one of Tirumāl's deeds.

So the god worships his own feet. The commentary explains that, having taken human form, Irāmaṉ behaves as a man should and worships Tirumāl, who is in fact himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṭiṉāṉ aṉṉam āy aru maṟaikaḷ pāṭiṉāṉ,
nīṭu nīr muṉṉai nūl neṟi muṟaiyiṉ nēmi tāḷ,
cūṭiṉāṉ muṉivartam tokuti cēr cōlaivāy
māṭutāṉ vaikiṉāṉ; eri katirum vaikiṉāṉ.