கம்பராமாயணம் 3831 · கிட்கிந்தா 1.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நெடியவன் - இராமன்; நீத்தம் நீரில் - பொய்கையின் வெள்ள நீரில்; மூழ்கலும் - முழுகின அளவில்; தீத்த - (அவன் திருமேனியை) வெதுப்பிய; காமத் தெறுகதிர்த்தீயினால் - காமமாகிய அழிக்கின்ற சுடர்விட்டு எரியும் நெருப்பினால்; அத்தோயம் - அப்பொய்கை நீர்; கருமகக்கம்மியன் - இரும்பு வேலை செய்பவனாகிய கருமான்; காய்த்து இரும்பை - இரும்பைக் காய்ச்சி; தோய்த்த - தோய்த்ததான; தண்புனல் ஒத்தது - குளிர்ந்த நீரை ஒத்தது.
சீதையைப் பிரிந்து வருந்தும் இராமபிரான் நீராடிய மாத்திரத்தில் அவன் மேனியின் வெப்பத்தால் அத்தண்ணீர் கொல்லன் உலையில் காய்ச்சிய இரும்பைத் தோய்த்த நீர்போலக் கொதித்தது என்பதாம்; உவமையணி. காமமும் கனலும் தாம் சேர்ந்த இடத்தைச் சுட்டெரிக்கும் தன்மையன ஆதலால் 'தீத்த காமத்தெறுகதிர்த்தீ' என்றார்; உருவக அணி. உலகத்து நீர் நெருப்பை அவிக்க, இக்காமத்தீ அந்நீரையும் கொதிக்கச் செய்யும் இயல்புடையதென வேற்றுமைப்பட வருதலின் வேற்றுமை அணியாகும்.
கருமகக்கம்மியன் - கருமகனாகிய கம்மியன்; இரு பெயரொட்டு. நீத்தம் - வெள்ளம்; நீந்தப்படுவது என்னும் பொருளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As soon as the tall one plunged into the flooding water,
- by the burning, blazing fire of desire that scorched him,
- that water became like the cool water into which a smith
- dips the iron he has heated.
What the poem says
The fire of longing in Irāmaṉ's body is so fierce that the moment he enters the lake its water boils, like the trough of water into which a blacksmith plunges red-hot iron.
The commentary points out three figures at once: the simile of the smith's water, the metaphor of desire as a scorching fire, and a contrast, since ordinary water puts out fire while this fire makes the water boil.