கம்பராமாயணம் 3836 · கிட்கிந்தா 1.41

Section கிட்கிந்தா காண்டம் / 1. பம்பைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொங்கி முற்றிய உணர்வு புணர்தலும் பகையினொடு
பங்கம் உற்று அளவு இல் வினை பரிவு உறும் படி முடிவு இல்
கங்குல் இற்றது கமலம் முகம் எடுத்தன ; கடலில்
வெம் கதிர்க் கடவுள் எழ , விமலன் வெம் துயரின் எழ .

பொருள் · Meaning in Tamil

விமலன் - குற்றமற்றவனாகிய இராமபிரான்; வெந்துயரின் எழ - கொடிய துன்பத்தினின்று நீங்கும்படி; கடலின் வெங்கதிர்க்கடவுள் - கடலில் வெய்யகதிர்களை உடைய கதிரவன்; எழ - உதிக்க; பொங்கி முற்றிய உணர்வு - நிரம்பி முதிர்ந்த மெய்யறிவு; புணர்தலும் - வந்து சேர்கையில்; புகையினொடு - புகையுடன்; பங்கம் உற்று அனைய வினை - சேறும் சேர்ந்தாற்போன்ற தீவினைகள்; பரிவுறும்படி - துன்பமடைந்து நீங்குவது போல; முடிவுஇல் - முடிவில்லாத; கங்குல் இற்றது - இரவு கழிந்தது; கமலம் - தாமரை மலர்கள்; முகம் எடுத்தன - மலர்ந்தன.

கதிரவன் தோன்றிய அளவில் இருள் நீங்குதலுக்கு மெய்யுணர்வு வந்து சேர்ந்த நிலையில் வினைகள் அழிந்தொழிதல் உவமம்; உவமை அணி. இரவுக் காலத்தில் மிக்கிருந்த துன்பம் பகற்காலத்தில் குறைவுபடுவதாலும், இராமன் அன்றையநாள் சுக்ரீவன் நட்பைப் பெற இருப்பதாலும் 'விமலன் வெந்துயரின் எழ' என்றார். புகையும் சேறும் கலந்தாற்போன்ற வினை என்றது - பாவத்தைக் கருநிறமுடையதாகக் காட்டும் மரபை நோக்கும். புகை மேலிருப்பது, சேறு அடியிலிருப்பது. எனவே மேலும் கீழும் குற்றம் பொருந்திய தீவினைக்கு உவமையாயிற்று. பிரிந்திருப்பார்க்கு இரவு நீட்டித்ததாகத் தோன்றுமாதலின் 'முடிவில் கங்குல்' எனப்பட்டது. இராமனின் துயர் இனி நீங்குமாதலின் தாமரை தலை நிமிர்ந்து மலர்ந்தது எனலாம். விமலன் வெந்துயராவது - பிராட்டியைப் பிரிந்தமையால் உண்டான துன்பமாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As karma, like smoke mixed with mire, is distressed and driven off
  2. when full and ripened true knowledge arrives,
  3. the endless night came to an end; the lotuses lifted their faces;
  4. the god of hot rays rose from the sea, and the spotless one rose from his burning grief.

What the poem says

Dawn comes after the sleepless night. As darkness vanishes when the sun rises, so evil karma vanishes when true wisdom dawns in the soul. Sin is pictured as dark, like smoke above and mud below, defiling from both sides.

The night seemed endless because Irāmaṉ was parted from Cītai. Now the lotuses open, and Irāmaṉ, the spotless one, rises out of his grief, for sorrow lessens by day and this is the day he will win the friendship of Cukkirīvaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṅki muṟṟiya uṇarvu puṇartalum pakaiyiṉoṭu
paṅkam uṟṟaṉaiya viṉai parivuṟumpaṭi muṭivu il
kaṅkul iṟṟatu kamalam mukam eṭuttaṉa; kaṭaliṉ
veṅ katirk kaṭavuḷ eḻa, vimalaṉ ven tuyariṉ eḻa.