கம்பராமாயணம் 3840 · கிட்கிந்தா 2.3

Section கிட்கிந்தா காண்டம் / 2. அனுமப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

அவ்இடத்து - அந்தக் குகையில்; அவர் மறுகி - சுக்கிரீவன், அமைச்சர் முதலியோர் மனம் கலங்கி; அஞ்சி - பயந்து; நெஞ்சு அழி அமைதி - மனவுறுதி இழந்து நிற்கும் சமயத்தில்; வெவ்விடத்தினை - கொடிய ஆலகால நஞ்சைக்கண்டு; மறுகு - கலங்கிய; தேவர், தானவர் - தேவர்களும் அசுரர்களும்; வெருவல் தவ்விட - அஞ்சுதல் நீங்கும்படி; தனி அருளு - தனித்து வந்து அருள்செய்த; தாழ்சடைக் கடவுளென - தாழ்ந்த சடையினையுடைய சிவபிரான்போல; இவ் இடத்து இனிது இருமின் - (வானரர்களை நோக்கி) 'இந்த இடத்தில் இனிதாக இருங்கள்; அஞ்சல் என்று - அஞ்ச வேண்டாம்' என்று; இடை உதவி - இடை நின்று ஆறுதல் கூறி;

வெவ்விடம் - பாற்கடல் கடைந்தபோது வாசுகியால் தோன்றிய ஆலகால நஞ்சு. கரிய நிறங்கொண்ட நஞ்சைக் கண்டு அஞ்சிய வானவர்களைப்போலக் கருநிற வண்ணனாம் இராமனைக் கண்டு வானரர்கள் அஞ்ச, சிவபிரான் வானவர்களின் துன்பம் நீக்கியது போல அனுமான் அஞ்சற்க என ஆறுதல் கூறினான். இஃது உவமை அணியாம். தாழ்சடைக் கடவுள் - சிவபிரான். 'நஞ்சட எழுதலும் நடுங்கி நாண்மதிச் செஞ்சடைக் கடவுளை அடையும் தேவர்போல' (442) என முன்னரும் கூறப்பட்டுள்ளது. அனுமன் சிவபிரானின் அம்சம்; ஆதலால் சிவபிரானை அனுமானுக்கு ஒப்பிட்டார். 'புராரி 'மற்று யானும் காற்றின் சேய்' எனப்புகன்றான்' (206) என்றது காண்க. அஞ்சல் - அல்லீற்று வியங்கோள்வினைமுற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. There, when they were troubled and afraid and their hearts had lost all calm,
  2. like the god with hanging matted locks who, alone, gave grace
  3. so that the fear of the gods and demons, distraught at the cruel poison, would leave them,
  4. he stepped in to help: "Stay here at ease; do not fear."

What the poem says

In the cave the monkeys are shaking with fear. Aṉumaṉ steps in and calms them, telling them to stay there and not be afraid. The poet compares him to Civaṉ, who alone came forward to save the gods and demons when the deadly Ālakāla poison rose from the churned Ocean of Milk.

The comparison fits on several levels: the gods feared the dark poison as the monkeys fear the dark-skinned Irāmaṉ, and Aṉumaṉ is held to be a portion of Civaṉ. This verse and the next form one sentence.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1av iṭattu, avar maṟuki, añci, neñcu aḻi amaiti,
vev viṭattiṉai maṟuku tēvar, tāṉavar, veruval
tavviṭa, taṉi aruḷu tāḻ caṭaik kaṭavuḷ eṉa,
'iv iṭattu iṉitu irumiṉ; añcal ' eṉṟu iṭai utavi.