கம்பராமாயணம் 3841 · கிட்கிந்தா 2.4

Section கிட்கிந்தா காண்டம் / 2. அனுமப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1அஞ்சனைக்கு ஒரு சிறுவன் , அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி , ஒரு மாணவப் படிவமொடு ,
'வெஞ்சமத் தொழிலர் , தவம் மெய்யர் , கை சிலையர் ' என ,
நெஞ்சு அயிர்த்து , அயல் மறைய நின்று , கற்பினின் நினையும் .

பொருள் · Meaning in Tamil

அஞ்சனைக்கு ஒரு சிறுவன் - அஞ்சனாதேவியின் ஒப்பற்ற மகனான அனுமன்; ஒரு மாணவப் படிவமொடு - ஒரு மாணாக்கன் வடிவம் தாங்கி; அஞ்சனக்கிரி அனைய - நீலமலையைப் போன்ற; மஞ்சனைக்குறுகி - மைந்தனாம் இராமனை நெருங்கி; அயல் மறைய நின்று - அருகில் மறைவாக நின்று; 'வெஞ்சமத் தொழிலர் - (அவர்களை நோக்கி) இவர்கள் கொடிய போர்த்தொழில் உடையர்; தவ மெய்யர் - தவவேடம் தாங்கிய உடம்பினர்; கைச்சிலையர் - கையில் வில்லேந்தியுள்ளனர்'; என நெஞ்சு அயிர்த்து - என்று மனத்தில் ஐயங்கொண்டு; கற்பினின் நினையும் - தனது கல்விஅறிவால் அவர்களைப் பற்றிச் சிந்தித்தான்;

அனுமன் உண்மை அறிதற் பொருட்டுத் தன் வடிவத்தை மாற்றிக்கொண்டு மாணாக்க வேடத்தோடு இராமனை அணுகினான். அஞ்சனை - அனுமனின் தாய்; அஞ்சனை மகன் ஆஞ்சனேயன். மஞ்சன் - மைந்தன் என்பதன் போலி. தயரதன் மகன் என்னும் கருத்தால் மஞ்சன் என்றார் மைந்தன் - வலிமையுடையவன் என்றும் கொள்ளலாம். போர்த்தொழில் உடையராயும், வில்லேந்தியவராயும் விளங்கியவர்கள் தவவேடம் கொண்டவராயும் தோன்றியதால் அனுமன் ஐயங்கொண்டான். இவ்வாறே சடாயுவும் இராமலக்குவரைக் கண்டபோது "வினையறு நோன்பினர் அல்லர்; வில்லினர்; புனை சடை முடியினர்; புலவரோ" (2700) என அயிர்த்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The matchless son of Añcaṉai, taking the form of a young student,
  2. drew near the hero who was like a mountain of collyrium;
  3. "Men whose work is cruel war, with bodies clad as ascetics, bows in their hands,"
  4. he doubted in his heart, and standing hidden nearby, pondered with all his learning.

What the poem says

Aṉumaṉ, son of Añcaṉai, disguises himself as a young brahmin student and creeps close to the brothers, keeping out of sight. What he sees puzzles him: they wear the dress of ascetics, yet they carry bows and look like warriors.

He weighs the contradiction with all his learning. Earlier in the epic the vulture Caṭāyu had been puzzled in exactly the same way on first seeing them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1añcaṉaikku oru ciṟuvaṉ, añcaṉak kiri aṉaiya
mañcaṉaik kuṟuki, oru māṇavap paṭivamoṭu,
'veñ camat toḻilar, tava meyyar, kaic cilaiyar ' eṉa,
neñcu ayirttu, ayal maṟaiya niṉṟu, kaṟpiṉiṉ niṉaiyum.