கம்பராமாயணம் 3851 · கிட்கிந்தா 2.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இவ்வகை எண்ணி - இவ்வாறு ஆலோசித்து; செவ்வழி உள்ளத்தானும் - செம்மை பொருந்திய மனமுடையவனாகிய அனுமனும்; ஆண்டு - அவ்விடத்தில்; அவ்இருவர் எய்தலோடும் - அவ்விரண்டு பேரும் வந்த அளவில், தெரிவுற எதிர்சென்று எய்தி - அவர்களுக்குத் தெரியுமாறு எதிரில்சென்று அடைந்து; நுங்கள் வரவு - "உங்கள் வருகை; கவ்வை இன்றாகஎன - துன்பம் இல்லாதது ஆகுக" என வரவேற்க; கருணையோனும் - அருள் உடையவனாகிய இராமனும்; எவ்வழி நீங்கியோய்? - நீ எவ்விடத்திலிருந்து வருகின்றாய்? யார் நீ - நீ யார் என விளம்பலுற்றான் - என்று வினவ (அனுமன்) சொல்லத் தொடங்கினான்.
முன்பு மறைய நின்று இராமலக்குவரின் இயல்புகளை ஆராய்ந்து அறிந்தவனாதலால், அவர்கள் தானிருக்கும் இடத்தை அடைந்தபோது மறைந்து நில்லாமல் அவர்கள் காண எதிரில் சென்றான் என்பதால் 'தெரிவுற எதிர் சென்று எய்தி' என்றார். அனுமன் நேர்வழியில் செல்பவன் ஆதலால் 'செவ்வழி உள்ளத்தான்' எனப்பட்டான். பின் இதே படலத்தில் சுக்கிரீவனைச் செவ்வழி உள்ளத்தான் என இராமன் குறிக்கிறான் (3770). இராமன் வருகையால் துன்பம் ஏற்படும் என்று சுக்கிரீவன் முதலியோர் கருதியதால் 'கவ்வை இன்றாக நுங்கள் வரவு' என அனுமன் வரவேற்றான். "தீதுஇல் வரவுஆக திரு! நின் வரவு" (2769) என இராமன் சூர்ப்பணகையிடம் கூறியதை ஒப்புநோக்கலாம். புதிதாக வருபவரை இங்ஙனம் கூறி வரவேற்றல் இயல்பு. கருணையோன் என்றது இராமனை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having thought in this way, as the two came up to that place,
- he of the upright heart went out openly to meet them and said,
- "May your coming be free of trouble!" And the compassionate one
- asked, "From where have you come? Who are you?" and he began to speak.
What the poem says
Having made up his mind about them, Aṉumaṉ no longer hides. When the brothers reach the spot he steps out openly in front of them and greets them with a blessing: may your coming bring no harm. The wish is pointed, since Cukkirīvaṉ's band had feared that their arrival meant danger.
Irāmaṉ asks him where he comes from and who he is, and Aṉumaṉ begins to answer. He is called upright of heart because he always takes the straight path.