கம்பராமாயணம் 3852 · கிட்கிந்தா 2.15

Section கிட்கிந்தா காண்டம் / 2. அனுமப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

மஞ்சு எனத்திரண்ட - மேகம் போல நீலநிறமுடையதாய்த் திரண்டு அமைந்த; கோல மேனிய - அழகிய மேனியை உடையவனே!; மகளிர்க்கு எல்லாம் - பெண்கள் யாவர்க்கும், நஞ்சு எனத்தகைய ஆகி - நஞ்சு என்று சொல்லத்தக்க தன்மையை உடையனவாகி, நளிர் இரும் பனிக்கு - குளிர்ச்சி மிக்க பனிக்கு, தேம்பாக் கஞ்சம் ஒத்து - வாடாத தாமரை மலர்களுக்கு ஒப்பாக; அலர்ந்த - மலர்ந்து விளங்குகின்ற; செய்ய கண்ண - சிவந்த கண்களை உடையவனே! யான் - யான்; காற்றின் வேந்தற்கு - வாயுதேவனுக்கு; அஞ்சனை வயிற்றில் - அஞ்சனாதேவியின் வயிற்றில்; வந்தேன் - பிறந்தேன்; நாமமும் - என் பெயரும்; அனுமன் என்பேன் - அனுமன் என்று அழைக்கப்பெறுவேன்.

நீலமேகம் நிறத்தாலும், குளிர்ச்சியாலும், அழகாலும் இராமன் மேனிக்கு உவமையாயிற்று. தன்னைக் காணும் மகளிர்க்கு இன்பம் அளிக்காமல் காமநோயை உண்டாக்கி வருத்துவதால் 'நஞ்சு எனத் தகைய ஆகி' எனப்பட்டது. "ஏழையர் ஆவியுண்ணும் இணைக்கூற்றம் கொல்லோ அறியேன். அழியங் கண்ணபிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்" (திருவாய்மொழி 7.7) என்பது ஒப்புநோக்கத்தக்கது. பனிக்குத் தேம்பாக் கஞ்சம் இராமன் கண்களுக்கு இல்பொருள் உவமை. இராமனின் அழகிய மேனியிலும், சிவந்த கண்களிலும் அனுமன் ஈடுபாடு கொண்டதைக் 'கோலமேனிய', 'செய்யகண்ண' என்னும் தொடர்கள் உணர்த்தும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "O you whose lovely body is massed like a dark cloud! O you whose red eyes
  2. are like poison to all women, and have opened like lotuses
  3. that do not wither in the cold heavy dew! I was born to the king of the Wind
  4. from the womb of Añcaṉai, and my name is Aṉumaṉ."

What the poem says

Aṉumaṉ introduces himself to Irāmaṉ: he is the son of Vāyu, god of the wind, born of Añcaṉai, and his name is Aṉumaṉ. His forms of address show how taken he already is with Irāmaṉ's dark cloud-like body and his red lotus eyes.

Those eyes are poison to women because they rouse a longing that cannot be satisfied. A lotus that does not wilt in heavy dew is an impossible flower; the comparison is made to an imagined, perfect lotus.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'mañcu eṉat tiraṇṭa kōla mēṉiya! makaḷirkku ellām
nañcu eṉat takaiya āki, naḷir irum paṉikkut tēmpāk
kañcam ottu alarnta ceyya kaṇṇa! yāṉ kāṟṟiṉ vēntaṟku
añcaṉai vayiṟṟil vantēṉ; nāmamum aṉumaṉ eṉpēṉ; '