கம்பராமாயணம் 3871 · கிட்கிந்தா 2.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நல்லன நிமித்தம் பெற்றேம் - முன்னர் நல்லனவாகிய சகுனத்தைப் பெற்றோம்; நம்பியைப் பெற்றேம் - அதனால் அனுமனாகிய இந்நம்பியை இங்கு அடையப் பெற்றோம்; நம்பால் - (இனி) நம்மிடத்து; துன்பம் ஆனது இல்லையே - துன்பம் என்பது இல்லை; இன்பமும் எய்திற்று - இன்பமும் வந்தடைந்தது; இன்னும் - மேலும்; வில்லினாய் - வில்லைஉடையவனே! இவனைப் போலாம் வீரன் - இவனைப்போன்ற வீரன்; கவிக்குலக் குரிசில் சொல்லினால் - குரங்குக் கூட்டத்திற்குத் தலைவனாகிய சுக்கிரீவன் கட்டளையால்; ஏவல் செய்வான் - குற்றேவல் செய்வான் (என்றால்); அவன் நிலை - அச் சுக்கிரீவனது நிலை; சொல்லற்பாற்றோ - சொல்லும் தரத்ததோ? (அன்று).
நல்லவர் துணை பெற்றமையால் துன்பம் நீங்கலும், இன்பம் பெறலும் உறுதி என்பது உணர்த்தப்பட்டது. வீரனாகிய அனுமன் ஏவல் செய்வான் எனில் இவனை ஏவலனாகக் கொண்ட சுக்கிரீவன் நிலை அனுமனினும் மேம்பட்டது என்பது பெறப்படும். கண்ட அனுமனைக் கொண்டு காணாத சுக்கிரீவன் பெருமையை இராமன் ஊகித்தான். அதனால் சீதையை மீட்டல் தப்பாது எனக் கருதி 'நம்பால் இல்லையே துன்பமானது இன்பமும் எய்திற்று' என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "We had good omens; we have found this noble one; for us
- there is no more sorrow; joy has come to us; and further,
- O bowman, if a hero like this one does the bidding
- of the lord of the monkey race at his word, can that lord's greatness even be told?"
What the poem says
Irāmaṉ tells Ilakkuvaṉ that the good omens they saw earlier have come true: they have found Aṉumaṉ, and with that their sorrow is over and joy has begun.
He reasons from the servant to the master: if a hero like this obeys Cukkirīvaṉ's word, Cukkirīvaṉ must be greater still. From the Aṉumaṉ he has seen he infers the greatness of the Cukkirīvaṉ he has not yet met, and feels sure that Cītai will be recovered.