கம்பராமாயணம் 3872 · கிட்கிந்தா 2.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்று - என்று சொல்லி; அகம் உவந்து - மனம் மகிழ்ந்து; கோல முகம் மலர்ந்து - (அதனால்) அழகிய முகமும் மலர்ச்சி பெற்று; இனிதின் நின்ற - மகிழ்ச்சியோடு இருந்த; குன்று உறழ் தோளினாரை நோக்கி - மலைபோன்ற தோள்களை உடைய இராமலக்குவரை நோக்கி; அக்குரக்குச் சீயம் - அந்த அனுமனாகிய சிங்கம்; வென்றியிர் - வெற்றியை உடையவர்களே! சென்று அவன் தன்னை - யான் சென்று சுக்கிரீவனை; இன்னே கொணர்கின்றேன் - இப்பொழுதே அழைத்துக் கொண்டு வருகின்றேன்; சிறிது போது இருத்திர் - சிறிது நேரம் இங்கே இருங்கள்; என்று விடைபெற்று - என்று கூறி, அவர்கள் பால் விடை பெற்றுக்கொண்டு; விரைவில் போனான் - விரைந்து சென்றான்.
ஆண்களில் சிறந்தோனை ஆண்சிங்கம் என்பது போலக் குரங்கினத்தில் சிறந்தோனாகிய அனுமனைக் 'குரக்குச் சீயம்' என்றார். சீயம் - சிங்கம். சீயம் - ஸிம்ஹம் என்னும் வடசொல்லின் திரிபு. தோற்றத்தால் குரங்காக இருப்பினும் நோக்கத்தில் சிங்கம் போல்வானாதலின் குரக்குச் சீயமானான் எனலாம். முன்னும் பின்னும் நோக்கும் சிங்கம் போல அனுமனும் இராமலக்குவரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளையும், நடைபெற உள்ளனவற்றையும் நோக்கி, அவர்களால் தமக்கு வரும் நன்மைகளை ஆராய்ந்து சுக்கிரீவனை நட்புக்கொள்ளச் செய்த திறம் புலனாகிறது. 'வென்றியிர்!' என அவன் விளித்தலில் வாலியை வெல்லும் திறமும் அடங்கியுள்ளது. நட்பாக்கிக் கொள்ளும் ஆர்வத்தை 'விரைவில் போனான்' என்ற தொடர் உணர்த்துகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he said this, glad at heart, his handsome face bright, he who stood there happily
- with shoulders like hills, that lion among monkeys looked at them and said,
- "I will go and bring him here at once; for a little while
- stay here, victorious ones," and taking his leave, he went off swiftly.
What the poem says
Aṉumaṉ, delighted, tells the brothers he will fetch Cukkirīvaṉ at once and asks them to wait a little; then he hurries away.
He is called a lion among monkeys. The commentary compares the lion's habit of looking both forward and back: Aṉumaṉ has weighed what has happened to the brothers and what lies ahead, and sees the good this friendship will bring. Calling them "victorious ones" hints at the victory over Vālī to come. This ends the Aṉumaṉ Paṭalam.