கம்பராமாயணம் 3876 · கிட்கிந்தா 3.4

Section கிட்கிந்தா காண்டம் / 3. நட்புக் கோட் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'சூழி மால் யானையார் தொழுகழல் தயரதன்
பாழியால் உலகு எலாம் ஒருவழிப் படர வாழ்
ஆழியான் , மைந்தர் ; பேர் அறிவினார் ; அழகினார் ;
ஊழியார் எளிது உனக்கு அரசுதந்து உதவுவார் .

பொருள் · Meaning in Tamil

பாழியால் - தன் வலிமையால்; உலகு எலாம் - எல்லா உலகங்களும்; ஒரு வழிப் படர - தன் ஒரு குடைக்கீழ் நடக்க; வாழ் ஆழியான் - ஆட்சி செய்து வாழும் ஆணைச்சக்கரத்தை உடையவனும், சூழிமால் யானையார் - முகபடாம் அணிந்த யானைப்படையை உடைய அரசர்களெல்லாம்; தொழு கழல் தயரதன் - வந்து தொழுகின்ற கழல் அணிந்த அடிகளையும் உடையவனான தசரதனின்; மைந்தர் - புதல்வர்கள்; பேர் அறிவினார் - பேரறிவினையுடையவர்கள்; அழகினார் - பேரழகு உடையவர்கள்; ஊழியால் எளிதின் - முறைமையாக எளிதில்; நிற்கு அரசு தந்து - உனக்கு அரசாட்சியை அளித்து; உதவுவார் - உதவி செய்வார்கள்.

நால்வகைப்படையில் யானைப்படையே சிறந்தது ஆதலின் 'யானையார்' எனக் கூறப்பட்டது. எனினும் இனம்பற்றித் தேர், குதிரை, காலாட்படையும் அடங்கும். தயரதன் அரசர்கள் வணங்கும் கழல்களை உடையவன். "திறையோடும் அரசு இறைஞ்சும் செறிகழற்கால் தசரதன்" (660), என்று முன்னர்க் கூறியது காண்க. தோள் வலிமையால் சம்பரனை வென்று விண்ணுலகையும் தன்னடிப்படுத்தி ஆண்டமையால் 'உலகெலாம்' என்றான். தன் ஆணையின் கீழ் நிற்க ஆள்வதே 'ஒரு வழிப்படர்தலாகும். 'கோவுடை நெடுமணி மகுடகோடியால், சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால்'. (175) என்ற அடியால் தயரதன் உலகமுழுதுடையான் என்பதை உணர்த்தும்.

இராமலக்குவரின் பேரழகினை 'உலகொடு மூன்றும் தம் உடைமை ஆக்குறும், அலகு அறும் இலக்கணம் அமைந்த மெய்யினர்' (2703) என்று சடாயுவும், 'எழுத அரு மேனியாய்' (2779) என்று சூர்ப்பணகையும் 'ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்' (4020) என்று வாலியும் பேசும் இடங்கள் ஒப்புநோக்கத்தக்கன. வாலியைக் கொன்று அரசளிப்பது இராமலக்குவர்க்கு அரிய செயலன்று என்பதால் 'எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார்' என்றான்.

இராமலக்குவரின் குலச்சிறப்பும், அறிவும், அழகும் ஆற்றலும் கூறப்பட்டுச் சுக்கிரீவன் அடையக்கூடிய பயனும் உணர்த்தப்படுகிறது. சுக்கிரீவன் குறிக்கோள் அரசு பெறுதல் ஆதலின் அவன் அடையும் பயனாக 'அரசு' வலியுறுத்திக் கூறப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Of Tacarataṉ, whose anklets are worshipped by kings with great caparisoned elephants,
  2. who lived ruling with his wheel of command, so that by his strength all the world moved one way,
  3. they are the sons; they have great wisdom; they have beauty;
  4. in due course they will easily give you the kingdom and help you."

What the poem says

Aṉumaṉ tells Cukkirīvaṉ who the strangers are: sons of Tacarataṉ, at whose feet kings with great elephant armies bowed and whose single rule held the whole world. They are wise and beautiful.

Most important for Cukkirīvaṉ, whose one aim is to win back his throne, they will easily kill Vālī and give him the kingdom. The commentary gathers other characters' praise of the brothers' beauty, from Caṭāyu, Cūrppaṇakai and Vālī himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cūḻimāl yāṉaiyār toḻu kaḻal tayarataṉ
pāḻiyāl ulaku elām oru vaḻip paṭara vāḻ
āḻiyāṉ, maintar; pēr aṟiviṉār; aḻakiṉār;
ūḻiyār eḷitiṉ niṟku aracu tantu utavuvār.