கம்பராமாயணம் 3878 · கிட்கிந்தா 3.6

Section கிட்கிந்தா காண்டம் / 3. நட்புக் கோட் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வேல் இகல் சினவு தாடகை விளிந்து உருள வில்
கோலி அக்கொடுமையாள் புதல்வனைக் கொன்று தன்
கால் இயல் பொடியினால் , நெடிய கற் படிவம் ஆம்
ஆலிகைக்கு அரிய பேர் உருவு அளித்து அருளினான் .

பொருள் · Meaning in Tamil

வேல் இகல் சினவு தாடகை - (அவ்விருவருள் முன்னவனாம் இராமன்) சூலாயுதத்தை ஏந்தி மாறுபட்டவளாய்ச் சினந்து வருகின்ற தாடகை; விளிந்து உருள - இறந்து தரையில் உருளுமாறு; வில் கோலி - வில்லை வளைத்து; அக்கொடுமையாள் - அக்கொடியவளின்; புதல்வனைக் கொன்று - மகனான சுபாகுவைக் கொன்று; தன்கால் இயல் பொடியினால் - தன் கால்களில் பொருந்திய தூளியினால்; நெடிய கல் படிவம் ஆம் - நீண்ட கல் வடிவமாகக் கிடந்த; ஆலிகைக்கு - அகலிகைக்கு, அரிய பேர் உரு - பெறுதற்கரிய சிறந்த உருவத்தை; அளித்து அருளினான் - கொடுத்து அருள் செய்தான்.

'நல்லுறுப்பு அமையும் நம்பியரில் முன்னவர்' என அடுத்த பாடலில் வருவது இடைநிலை விளக்காய் இப்பாடலுக்கு எழுவாயாய் நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "He bent his bow so that Tāṭakai, raging and hostile with her spear, fell dead and rolled,
  2. and killed that cruel woman's son; and by the dust
  3. of his own feet he graciously gave to Ākalikai, who had become a long form of stone,
  4. a rare, great form once more."

What the poem says

Aṉumaṉ recounts Irāmaṉ's early deeds. On his journey with Vicuvāmittiraṉ he bent his bow and killed the demoness Tāṭakai, who came at him with her spear, and then her son Cupāku. And with the mere dust of his feet he restored Akalikai, who had been turned to stone by a curse, to her own form.

The subject, "the elder of the two," is named only in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēl ikal ciṉavu tāṭakai viḷintu uruḷa vil
kōli ak koṭumaiyāḷ putalvaṉaik koṉṟu taṉ
kāliyal poṭiyiṉāl, neṭiya kaṟ paṭivam ām
ālikaikku ariya pēr uru aḷittaruḷiṉāṉ.