கம்பராமாயணம் 3879 · கிட்கிந்தா 3.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நல் உறுப்பு அமையும் - நல்ல உறுப்பிலக்கணம் அமைந்த; நம்பியரில் முன்னவன் - அவ்ஆண் மக்களுள் முன் பிறந்தவனான இராமன்; மிதிலை புக்க அனைய நாள் - மிதிலை நகரத்துள் புகுந்த அந்த நாளில், எல் உறுப்பு - ஒளி வீசும் கதிர்களை உறுப்பாக உடைய; அரிய பேர் எழுசுடர்க் கடவுள்தன் - அரிய பெரிய சூரிய பகவானின்; பல் இறுத்தவன் - பற்களை உதிர்த்தவனாகிய சிவபிரானின்; வலிக்கு அமை - வலிமைக்கு ஏற்ப அமைந்த; தியம்பகம் எனும் வில் - 'திரியம்பகம்' என்று சொல்லப்பெறும் வில்லை; நயந்து - (வளைக்க) விரும்பி; இறுத்து அருளினான் - ஒடித்து அருளினான்.
அரச குமாரர்களுக்கு ஏற்ற உறுப்பிலக்கணம் பெற்றவராதலின் 'நல் உறுப்பு அமையும் நம்பியர்' என்றார். ஆடவரில் சிறந்தோர் 'நம்பியர்' எனப்படுவர். எரிசுடர்க்கடவுள் பல்லிறுத்தது - வீரபத்திரனாகச் சிவபிரான் தக்கன் யாகத்தில் மற்ற தேவர்களோடு வந்திருந்த சூரியனின் பற்களைத் தகர்த்ததாகக் கூறப்படும் வரலாறு. 'சூரியனார் தொண்டை வாயினில் பற்களை, வாரி நெரித்தவா உந்த பற' (திருவாசகம் - திருவுந்தி - 15) என்றது காண்க.
தியம்பகம் - திரியம்பகம் என்பதன் திரிபு; சிவதனுசுவின் பெயர். மூன்று கண்களை உடையதால் திரியம்பகம் எனப்பட்டது. சுடர்மிகு கதிரவனின் பற்களைத் தகர்த்த சிவபிரானின் வில்லை முறித்த இராமனுக்கு வாலியை வெல்வது எளிய பட்லு எனச் சுக்கிரீவனுக்கு இங்குக் குறிப்பாக உணர்த்தப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The elder of these finely formed noble youths, gladly,
- broke the bow called Tiyampakam, fit for the strength of him who broke the teeth
- of the great, rare god of the rising flame whose limbs are rays of light,
- on the day he entered Mitilai."
What the poem says
Aṉumaṉ continues: this elder brother, on the day he entered Mitilai, broke Civaṉ's great bow Tiryambakam, the bow of the god who once smashed the Sun's teeth at Takkaṉ's sacrifice.
The hint to Cukkirīvaṉ is clear: one who could break the bow of the god who humbled Cukkirīvaṉ's own father, the Sun, will have no trouble with Vālī.