கம்பராமாயணம் 388 · பால 7.58

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இந்திரன் இடைந்தான்; உடைந்து ஓடினார்
தந்திரம் படத் தானவர் வானவர்;
மந்தரம் இவள் தோள் எனின், மைந்தரோடு
அந்தரம் இனி யாது கொல் ஆம்? ஐயா!'

பொருள் · Meaning in Tamil

இந்திரன் இடைந்தான் - இந்திரன் இவளுடன் எதிர்க்கவந்து பின்னிட்டு ஓடினான்; தானவர் வானவர் - அரக்கர்களும் தேவர்களும்; தந்திரம்பட உடைந்து ஓடினர் - தமது சேனைகள் அழிய, சிதறி ஓடிவிட்டார்கள்; இவள் தோள் மந்தரம் எனின் - இவளது தோள்கள் மந்தர மலை போன்றது என்றால்; மைந்தரோடு ஆண்மை இனி அந்தரம்யாது - தக்க ஆண்களோடு ஆண்மையில் என்ன பேதம் இருக்கிறது?

இடைந்தான்: பின்னிட்டான் (பின்வாங்கினான். உடைந்து: சிதறி. தந்திரம்: படை. பட: அழிய. மந்தரம்: மந்தரமலை. மைந்தர்: வலிமையுடை ஆண்கள். அந்தரம்: வேறுபாடு (பேதம்). பெண்ணாகிய இவளுக்கும், வலிமைமிக்க ஆண்களுக்கும் என்ன வேறுபாடிருக்கிறது? இந்திரன் முதலானோரும் தோற்று ஓடும்படி செய்த இவளைப் பெண் என நினைக்கலாமா.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Intiraṉ gave way before her; the Dānavas and the gods
  2. broke and fled, their armies destroyed;
  3. if her shoulders are Mount Mantara, then what difference
  4. is there now between her and men, in manliness?

What the poem says

Vicuvāmittiraṉ cites Tāṭakai's record. Intiraṉ, king of the gods, retreated from her, and both the gods and their enemies the Dānavas fled with their armies in ruins.

Her shoulders are like Mount Mantara, the mountain used to churn the cosmic ocean. Where is the difference between her and the mightiest men? Someone who routs the gods cannot be spared on the grounds that she is a woman.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'intiraṉ iṭaintāṉ; uṭaintu ōṭiṉār
tantiram paṭat tāṉavar vāṉavar;
mantaram ivaḷ tōḷeṉiṉ, maintarōṭu
antaram iṉi yātukol āṇmaiyē!'